பிரபல நகைச்சுவை நடிகருக்கு பிடியாணை பிறப்பிப்பு
#India
#Tamil Nadu
#Arrest
#Court Order
#Actor
#warrant
#comedy
Prasu
1 year ago

செக் மோசடி வழக்கில் விசாரணைக்கு ஆஜராகாத காரணத்தினால் நடிகர் ‛பவர் ஸ்டார்' சீனிவாசனுக்கு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன், ராமநாதபுரம் மாவட்டம் தேவி பட்டிணத்தை சேர்ந்த முனியசாமி என்பவருக்கு ரூ.15 கோடி கடன் வாங்கி தருவதாக கூறி ரூ.14 லட்சத்தை முன்பணமாக பெற்றுக் கொண்டுள்ளார்.
ஆனால், கடனும் வாங்கி கொடுக்காமல் பெற்று கொண்ட ரூ.14 லட்சத்தையும் திருப்பி கொடுக்காததால் முனியசாமி ராமநாதபுரம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிமன்றத்தில் பல முறை விசாரணைக்கு வந்தும் பவர் ஸ்டார் சீனிவாசன் ஆஜராகாததால் இன்று நடுவர் நீதிமன்ற நீதிபதி அவருக்கு பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார்.
மேலும், 2024 ஜனவரி 2ம் திகதிக்குள் சீனிவாசனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சென்னை அண்ணாநகர் போலீசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.



