உடல்நலக்குறைவால் நடிகர் மதுரை மோகன் அவர்கள் காலமானார்
#India
#Cinema
#Death
#Health
#Actor
#TamilCinema
#Hospital
#ill
Prasu
1 year ago

ஐயா நடிகர் மதுரை மோகன் அவர்கள் இன்று காலை உடல்நலக்குறைவால் காலமானார். தமிழ் சினிமாவில் 40 ஆண்டுகளுக்கு மேலாக சிறுசிறு வேடங்களில் நடித்து வந்தவர்
மோகன். மதுரையை சேர்ந்த இவர் சில மாதங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தார். இதனால் சினிமாவை விட்டும் ஒதுங்கியிருந்தார். இந்நிலையில் இன்று அவரது உயிர் பிரிந்தது.
40 ஆண்டுகளாக சினிமாவில் நடித்து வந்தாலும் அவருக்கு பெரும் புகழை தந்தது ராம் குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளிவந்த ‛முண்டாசுப்பட்டி’ படம் தான். தொடர்ந்து ஏஆர்கே சரவண் இயக்கத்தில் ஆதி நடிப்பில் வெளியான ‛வீரன்’ படத்திலும் நடித்து அசத்தினார்.
பெரும்பாலும் கிராமத்து கலந்த வேடங்களிலேயே நடித்தார். ரஜினி முருகன் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.



