14 நாட்கள் இமயமலையில் நிர்வாணமாக வாழ்ந்த பிரபல பாலிவுட் நடிகர்

#Cinema #Actor #Tamilnews #Mountain #Forest #Nude #Living #Himalayas
Prasu
1 year ago
14 நாட்கள் இமயமலையில் நிர்வாணமாக வாழ்ந்த பிரபல பாலிவுட் நடிகர்

பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம்வருபவர் வித்யுத் ஜமால். இவர் பில்லா 2, அஞ்சான் போன்ற தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். வித்யுத் ஜம்வால் இன்று (டிசம்பர் 10) தனது 43-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்த நிலையில், பிறந்தநாளை ஒட்டி நடிகர் வித்யுத் ஜமால் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.

இமய மலை தொடர்களில் ஒருவார காலம் தான் வாழ்ந்த வாழ்க்கையை விவரிக்கும் வகையில், மூன்று புகைப்படங்களையும் ஏன் இப்படி ஒரு வாழ்க்கை முறையை பின்பற்றுகிறார் என்பது பற்றியும் வித்யுத் ஜம்வால் விளக்கம் அளித்து இருக்கிறார்.

14 ஆண்டுகளுக்கு முன்பு துவங்கிய வழக்கப்படி ஒவ்வொரு ஆண்டும் 7 முதல் 10 நாட்கள் வரை வித்யுத் ஜம்வால் யார் உதவியும் இன்றி தனியாக வாழ்ந்து வருகிறார். ஆடம்பர வாழ்க்கையை தவிர்த்து காட்டு பகுதியில் யார் உதவியும் இன்றி இயற்கையுடன் ஒன்றி இருக்கும் வகையில், வித்யுத் ஜம்வால் ஏழு முதல் பத்து நாட்கள் வரை காட்டு பகுதியில் தனது உடலில் ஆடை எதுவும் இன்றி நிர்வாணமாக கழித்து வருகிறார். 

அந்த வகையில், இந்த ஆண்டு இமய மலை பகுதிகளில் நிர்வாணமாக வசித்துள்ளார். இவ்வாறு செய்யும் போது, தன்னால் இயற்கையுடன் ஒன்றி இருக்க முடிவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் இப்படி இருக்கும் போது தனக்கு புதுவித சக்தி கிடைப்பதாகவும், இங்கிருந்து கிளம்பும் போது அந்த சக்தியுடன் வீட்டுக்கு செல்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் இந்த அனுபவம் தன்னை புதிதாக பிறந்ததை போன்ற அனுபவத்தை கொடுக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 அந்த வகையில், தனது வாழ்க்கையின் அடுத்த பக்கத்திற்கு அவர் தயாராகி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் க்ராக் திரைப்படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!