ரிஷப ராசியினருக்கு பொன் பொருள் சேர்க்கை உண்டாகும் - இன்றைய ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan #Lanka4
Prasu
4 months ago
ரிஷப ராசியினருக்கு பொன் பொருள் சேர்க்கை உண்டாகும் - இன்றைய ராசிபலன்

மேஷம்

அசுவினி: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளில் தடை ஏற்படும். தொழிலில் கவனம் தேவை. பரணி: எதிர்பாராத நெருக்கடிகளுக்கு ஆளாவீர். பணிபுரியும் இடத்தில் கூடுதல் எச்சரிக்கை அவசியம். கார்த்திகை 1: உங்கள் முயற்சி வெற்றியாகும். எதிர்பார்த்தவற்றை அடைவீர். பண வரவில் இருந்த தடை விலகும்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: எண்ணம் நிறைவேறும். குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றுவீர். வரவேண்டிய பணம் வரும். ரோகிணி: வருமானம் அதிகரிக்கும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். நண்பர்கள் ஆதரவால் முயற்சி நிறைவேறும். மிருகசீரிடம் 1,2: தொழிலில் இருந்த மந்த நிலை நீங்கும். மதியத்திற்குமேல் உங்கள் விருப்பம் நிறைவேறும். 

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: உடலில் இருந்த சங்கடம் நீங்கும். உயர்ந்தோர் ஆதரவால் செல்வாக்கு உயரும். எதிர்ப்பு விலகும். திருவாதிரை: விரைந்து செயல்பட்டு ஒரு செயலை முடிப்பீர். இழுபறியாக இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். புனர்பூசம் 1,2,3: பணிபுரியும் இடத்தில் உங்கள் ஆலோசனைக்கு மதிப்புண்டாகும். தொழிலில் புதிய முயற்சி பலிக்கும். 

கடகம்

புனர்பூசம் 4: எதிர்பார்த்த நல்ல செய்தி வரும். உறவினர் வருகையால் மகிழ்ச்சி அதிகரிக்கும். நினைத்ததை அடைவீர். பூசம்: உங்கள் செயல் ஆதாயமாகும். நினைத்தது எளிதாக நிறைவேறும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை தீரும். ஆயில்யம்: உறவினர்களுடன் இருந்த சங்கடம் நீங்கும். பெரியோரின் ஆசியால் எண்ணம் வெற்றி பெறும். 

சிம்மம்

மகம்: தாய்வழி உறவுகளால் சங்கடம் தோன்றும் என்றாலும் உங்கள் முயற்சியில் வெற்றி அடைவீர்கள். பூரம்: வியாபாரத்தில் மறைமுகத் தொல்லை அதிகரிக்கும். உங்கள் முயற்சியால் அனைத்தையும் சரி செய்வீர். உத்திரம் 1: கடன்களால் சங்கடம் ஏற்படும். வியாபாரத்தை விரிவு செய்வது குறித்து ஆலோசிப்பீர். 

கன்னி

உத்திரம் 2,3,4: நெருக்கடி விலகும். துணிச்சலுடன் செயல்படுவீர். உங்கள் முயற்சி எளிதாக நிறைவேறும். அஸ்தம்: உங்களிடம் வேலை செய்பவர்களின் ஒத்துழைப்பு லாபத்தை அதிகரிக்கும். மகிழ்ச்சியான நாள். சித்திரை 1,2: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி பலிக்கும். எதிர்பாராத ஆதாயம் உண்டாகும்.சகோதரரால் நன்மை நடக்கும். 

துலாம்:

சித்திரை 3,4: குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். தம்பதியர்கள் புரிந்து செயல்படுவர். வருமானம் அதிகரிக்கும். சுவாதி: புதிய வேலை வாய்ப்பிற்குரிய முயற்சி வெற்றியாகும். எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பண வரவு திருப்தி தரும். விசாகம் 1,2,3: உறவினரின் சுய ரூபத்தை தெரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்படுவீர். நீங்கள் நினைத்ததை சாதிப்பீர். 

விருச்சிகம்

விசாகம் 4: உங்கள் திட்டமிடுதலில் குழப்பம் உண்டாகும். நீங்கள் நினைத்ததற்கு மாறாக இன்று ஒரு செயல் நடக்கும். அனுஷம்: பொறுப்பு அதிகரிக்கும். ஒரு சிலருக்கு பணிபுரியும் இடத்தில் பிரச்னை உண்டாகும். அமைதி காக்கும் நாள். கேட்டை: அவசர வேலைக்காக அடுத்தவர் உதவியை எதிர்பார்ப்பீர். எதிர்பார்த்த பொன் பொருள் வாங்கும் நாள். 

தனுசு

மூலம்: செலவு அதிகரிக்கும் என்பதால் நிதானமாக செயல்படுவீர். சிக்கனத்தைக் கடைபிடிப்பது நல்லது. பூராடம்: அலைச்சல் அதிகரிக்கும். மற்றவரை அனுசரித்துச் செல்வது முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும். உத்திராடம் 1: எதிர்பாராத பயணமும் அலைச்சலும் உண்டாகும். பொருளாதார நெருக்கடிக்கு ஆளாவீர்கள். 

மகரம்

உத்திராடம் 2,3,4: நட்பின் வழியே உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். திருவோணம்: நீண்டநாள் நெருக்கடி நீங்கும். எதிர்பாராத வருவாய் வரும். உங்கள் செயல் வெற்றியாகும். அவிட்டம் 1,2: உங்கள் முயற்சி நிறைவேறும். குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். பணவரவு உண்டு. 

கும்பம்

அவிட்டம் 3,4: இழுபறியான முயற்சி லாபம். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு உங்கள் செயல்களில் வெற்றி காண்பீர். சதயம்: உங்கள் எண்ணம் நிறைவேறும். பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். இழுபறி விவகாரம் முடியும். பூரட்டாதி 1,2,3: பண வரவில் இருந்த தடை விலகும். உங்கள் முயற்சி லாபத்தை உண்டாக்கும். 

மீனம்

பூரட்டாதி 4: உத்தியோகத்தில் உண்டான நெருக்கடி விலகும். வரவேண்டிய பணம் வரும். கடன்களை அடைப்பீர். உத்திரட்டாதி: மனதில் இருந்த குழப்பம் விலகும். அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். ரேவதி: நேற்றுவரை இழுபறியாக இருந்த முயற்சி இன்று நிறைவேறும். குடும்பத்தில் ஏற்பட்ட சங்கடம் விலகும்.