தனுசு ராசிக்காரர்களுக்கு கவனக்குறைவால் சங்கடங்கள் ஏற்படும் - இன்றைய ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan #Lanka4
Prasu
4 months ago
தனுசு ராசிக்காரர்களுக்கு கவனக்குறைவால் சங்கடங்கள் ஏற்படும் - இன்றைய ராசிபலன்

மேஷம்

அசுவினி : இழுபறியாக இருந்த முயற்சி நிறைவேறும். மனதில் இருந்த சங்கடம் விலகும். பரணி: உத்தியோகத்தில் ஏற்பட்ட சங்கடம் விலகும். காலையில் மேற்கொண்ட முயற்சி மாலையில் வெற்றி பெறும். கார்த்திகை 1: உங்கள் முயற்சிகளில் மதியம் வரை சில தடையை சந்திப்பீர். நெருக்கடி தோன்றும்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: மதியத்திற்கு மேல் செயல்களில் சங்கடம் உண்டாகும். மனதில் குழப்பம் தோன்றும். ரோகிணி: வியாபாரத்தை விரிவு செய்யும் முயற்சி பலன் அளிக்கும். எதிர்பார்த்த வருவாய் வரும். மிருகசீரிடம் 1,2: குடும்பத்தில் பிரச்னை தோன்றும் இருந்தாலும் சமாளிப்பீர்கள். பிறரிடம் பேசும்போது கவனம் தேவை.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். முயற்சி வெற்றியாகும். அரசு வழியில் ஆதாயம் உண்டு. திருவாதிரை: வியாபாரத்தின் சூட்சமம் புலப்படும். லாபத்திற்குரிய வழிகளைக் கண்டறிவீர். நிதி நிலை உயரும். புனர்பூசம் 1,2,3 : காலையில் மேற்கொள்ளும் முயற்சி மாலையில் வெற்றியாகும். வரவேண்டிய பணம் வரும்.

கடகம்

புனர்பூசம் 4: இழுபறியாக இருந்த முயற்சி மதியத்திற்கு மேல் நிறைவேறும். எதிர்பார்த்த தகவல் வரும். பூசம்: வியாபாரத்தில் இருந்த இடையூறு அகலும். உங்கள் செயல்களில் லாபம் ஏற்படும். உற்சாகம் அதிகரிக்கும். ஆயில்யம்: உறவினர் ஒத்துழைப்பால் வருமானம் அதிகரிக்கும். இன்று மாலையில் நீங்கள் எதிர்பார்த்த செய்தி வரும்.

சிம்மம்

மகம்: நீங்கள் எதிர்பார்த்த ஆதாயம் ஏற்படும். தொழிலில் புதிய தொடர்பு கிடைத்து முன்னேற்றம் தோன்றும். பூரம்: குடும்ப நிலையை உயர்த்த முயற்சிப்பீர். தடைபட்டிருந்த வருவாய் வரும். கடவுள் வழிபாடு நிம்மதி தரும். உத்திரம் 1: பூர்வீக சொத்தில் இருந்த பிரச்னைகளை பேசித் தீர்ப்பீர். மதியத்திற்கு மேல் பெரியவரிடம் ஆசி வழங்குவீர்.

கன்னி

உத்திரம் 2,3,4: வியாபாரத்தில் ஆதாயம் அடைவீர். தன்னம்பிக்கை அதிகரிக்கும். உங்கள் முயற்சி அனுகூலமாகும். அஸ்தம்: வேலைத்தேடி வந்தவர்களுக்கு நல்ல தகவல் வரும். நண்பர் ஒத்துழைப்பால் உங்கள் செயல் வெற்றியாகும். சித்திரை 1,2: திடீர் பயணம் உண்டாகி அலைச்சலை ஏற்படுத்தும். உங்கள் முயற்சியில் முன்னேற்றம் காண்பீர்கள்.

துலாம்

சித்திரை 3,4: குடும்ப நலனில் அக்கறை கொள்வீர். நீண்ட நாளாக நிறைவேறாமல் இருந்த முயற்சி நிறைவேறும். சுவாதி: வியாபாரத்தை விருத்தி செய்வீர். நிதிநிலையில் உயர்வு உண்டாகும். புதிய முயற்சி லாபம் தரும். விசாகம் 1,2,3: கடவுள் வழிபாட்டில் ஈடுபடுவீர். விஐபிகள் உதவியுடன் உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும்.

விருச்சிகம்

விசாகம் 4: நேற்றுவரை இருந்த குழப்பம் விலகும். செயல்களில் தெளிவு உண்டாகும். விலகிச் சென்ற நண்பர்கள் மீண்டும் உங்களைத்தேடி வருவார்கள். அனுஷம்: வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். லாபம் அதிகரிக்கும். கேட்டை: உங்கள் மனம் தெளிவடையும். தடைபட்டிருந்த முயற்சி முடிவிற்கு வரும். நினைத்ததை நிறைவேறும்.

தனுசு

மூலம்: மதியத்திற்கு மேல் குடும்பத்தில் குழப்பம் அதிகரிக்கும்.பிரச்னையை மற்றவரிடம் கொண்டு செல்ல வேண்டாம். பூராடம்: உங்களை சீண்டிப்பார்க்க சிலர் முயற்சிப்பர். எந்த நிலையிலும் அமைதியை இழக்காதீர். கவனம் தேவை. உத்திராடம் 1: உங்கள் வேலையில் மட்டும் மனதை செலுத்துங்கள். கவனக்குறைவால் சங்கடம்ஏற்படும்.

மகரம்:

உத்திராடம் 2,3,4: மதியத்திற்குமேல் எதிர்பாராத செலவு உண்டாகும். வாகனம் பழுதாகி உங்களை சங்கடப்படுத்தும். திருவோணம்: வருவாயைவிட செலவு அதிகரிக்கும். கடன் கொடுத்தவர் நெருக்கடியை ஏற்படுத்துவர். அவிட்டம் 1,2: முயற்சி இழுபறியாகும். உங்கள் செயல்களைப் போராடி முடிக்க வேண்டியதாக இருக்கும்.

கும்பம்

அவிட்டம் 3,4: நினைத்ததை நிறைவேற்றிக் கொள்வீர். உங்கள் திறமையால் மற்றவர் விருப்பத்தை நிறைவேற்றுவீர். சதயம்: புதிய தொழில் தொடங்கும் முயற்சியை மேற்கொள்வீர். மதியத்திற்குமேல் நண்பர்கள் உதவி செய்வார்கள். பூரட்டாதி 1,2,3: வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். நிதிநிலை உயரும்.

மீனம்

பூரட்டாதி 4: பழைய பிரச்னை முடிவுக்கு வரும். வியாபாரத்தில் இருந்த தடை விலகும். உத்திரட்டாதி: நேற்றைய முயற்சி ஒன்று மதியத்திற்கு மேல் நிறைவேறும். வருமானம் மகிழ்ச்சியை உண்டாகும். ரேவதி: வியாபாரத்தில் அக்கறை செலுத்துவீர். புதிய வாடிக்கையாளர் அதிகரிப்பர். நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும்.