2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news #budget
Thamilini
2 years ago
2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது!

2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று (13.12) பாராளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. 

வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 122 வாக்குகளும் எதிராக 81 வாக்குகளும் கிடைக்கப்பெற்றன.   இதன்படி, வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு 41 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. 

நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரன் வாக்களிக்காமல் புறக்கணித்தார். அதன்படி, 2024 ஜனவரி 9ம் திகதி வரை சட்டசபை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். 

நவம்பர் 13ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டு வரைவை நிதியமைச்சராக பாராளுமன்றத்தில் சமர்ப்பித்ததோடு, இரண்டாம் வாசிப்பு விவாதம் நவம்பர் 21ஆம் திகதி வரை நடைபெற்ற பின்னர், அன்று பிற்பகல் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. 

வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 122 வாக்குகளும் எதிராக 77 வாக்குகளும் பதிவாகின. வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான விவாதம் நவம்பர் 22ஆம் திகதி முதல் இன்று வரை நடைபெற்ற நிலையில், இன்று (13.12) விவாதம் இடம்பெற்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4