சமூகவலைத்தளங்கள் மூலம் பரப்பப்படும் குற்றச்சாட்டுகளை விசாரிக்க தனி பிரிவு ஸ்தாபிப்பு!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
சமூகவலைத்தளங்கள் மூலம் பரப்பப்படும் குற்றச்சாட்டுகளை விசாரிக்க தனி பிரிவு ஸ்தாபிப்பு!

சமூக வலைதளங்கள் மூலம் செய்யப்படும் மதக் குற்றங்களை விசாரிக்க தனி பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பதில் பொலிஸ் மா அதிபர்  தேஸபந்து தென்னகோனின் பணிப்புரையின் பிரகாரம் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி  நிஹால் தல்துவா, "சமூக ஊடக வலையமைப்புகள் மூலம் செய்யப்படும் மதக் குற்றங்கள் தொடர்பான புகார்களைப் பெறுவதற்கு தனிப் பிரிவை நிறுவுமாறு, கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு, பதில் காவல் கண்காணிப்பாளர் உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரிவித்தார். 

அதன்படி, மதங்களை இழிவுபடுத்துவது தொடர்பான முறைப்பாடுகளை விசாரிக்க குற்றப் புலனாய்வுப் பிரிவின் தனிப் பிரிவு ஏற்படுத்தப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். 

இதன்படி, பொதுமக்கள் 0112 300 637 என்ற இலக்கத்தின் ஊடாக இது தொடர்பான முறைப்பாடுகளை அறிவிக்க முடியும் எனவும்,  தொலைநகல் எண் – 0112 381 045 மின்னஞ்சல் முகவரி - ccid.religious@police.gov.lk என எந்த வழிமுறையிலும் தொடர்பு கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4