நாடாளுமன்ற தாக்குதலுடன் தொடர்புடைய ஐவர் கைது

#India #Arrest #Police #Parliament #world_news #Attack #Minister #TearGas
Prasu
2 years ago
நாடாளுமன்ற தாக்குதலுடன் தொடர்புடைய ஐவர் கைது

பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று மதியம் மக்களவையில் பார்வையாளர் இடத்திலிருந்து 2 பேர் எம்.பி.க்கள் இருந்த இடத்திற்குள் குதித்து கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். 

பதற்றம் அடைந்த எம்.பி.க்கள் அங்கிருந்து ஓட ஆரம்பித்தனர். பாதுகாவலர்கள், உறுப்பினர்கள் சேர்ந்து அவர்களை மடக்கினர். இதேபோல், பாராளுமன்றத்திற்கு வெளியேயும் புகை குண்டு வீச்சில் ஈடுபட்டனர். 

தாக்குதல் நடத்திய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர், தாக்குதல் நடத்திய ஆசாமிகளில் ஒருவரான சாகர் சர்மாவிடம் இருந்து மைசூர் பா.ஜ.க. எம்.பி.யான பிரதாப் சிம்ஹாவின் பரிந்துரை பாஸ் கிடைத்துள்ளது.

பாராளுமன்றத்தில் கலர் புகை குண்டு வீசிய சம்பவத்தில் 6 பேருக்கு தொடர்பு உள்ளது. இதில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். 

தாக்குதலில் தொடர்புடைய மேலும் 2 பேர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

 இந்நிலையில், பாராளுமன்ற தாக்குதல் நடத்திய ஆசாமிகளில் மேலும் ஒருவர் குர்கானில் கைது செய்யப்பட்டுள்ளார். மற்றொருவரை தேடி வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!