ரிஷப ராசியினருக்கு சந்திராஷ்டமம் தொடர்வதால் செயல்களில் பின்னடைவு ஏற்படும் - ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan #Lanka4
Prasu
4 months ago
ரிஷப ராசியினருக்கு சந்திராஷ்டமம் தொடர்வதால் செயல்களில் பின்னடைவு ஏற்படும் - ராசிபலன்

மேஷம்

அசுவினி: அரசு வழியில் இருந்த தடை விலகும்.பெரியோர் ஆதரவு அதிகரிக்கும். வியாபாரம் விருத்தி அடையும். பரணி: பொருளாதார நெருக்கடி விலகும். வியாபாரத்தில் விருத்தி அடையும். நீண்ட நாள் முயற்சி நிறைவேறும். கார்த்திகை 1: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி நிறைவேறும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: உங்கள் முயற்சியில் எதிர்பார்த்த பலனை அடைய முடியாமல் போகும். அலைச்சல் அதிகரிக்கும். ரோகிணி: சந்திராஷ்டமம் தொடர்வதால் உங்கள் செயல்களில் பின்னடைவு ஏற்படும்.தொழிலில் இழுபறி உண்டாகும். மிருகசீரிடம் 1,2: உங்கள் செயல் முயற்சிக்குப்பின் நிறைவேறும். மனதில் இனம் புரியாத பயம் உண்டாகும்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: உங்கள் முயற்சியில் முன்னேற்றம் உண்டாகும். நண்பர்கள் உதவி கிடைத்து மகிழ்வீர்கள். திருவாதிரை: மற்றவர்களால் முடியாத ஒரு செயலில் ஈடுபட்டு வெற்றி காண்பீர். மகிழ்ச்சிக்குரிய நாள். புனர்பூசம் 1,2,3: குடும்பத்தில் இருந்த சங்கடம் சரியாகும். எதிர்பார்த்த வரவு வரும். நினைத்ததை நடத்தி முடிப்பீர்.

கடகம்:

புனர்பூசம் 4: ஆரோக்கியம் சீராகும். சுறு சுறுப்பாக செயல்படுவீர். இழுபறியாக இருந்த செயல் நிறைவேறும். பூசம்: உங்கள் முயற்சியில் வெற்றி காண்பீர். வியாபாரத்தை விரிவு செய்வீர். மற்றவர்களால் மதிக்கப்படுவீர். ஆயில்யம்: போட்டியாளர்கள் பலம் இழந்து போவர். இழுபறியாக இருந்த விவகாரம் உங்களுக்கு சாதகமாகும்.

சிம்மம்

மகம்: பிள்ளைகளுக்காக மற்ற வேலைகளை ஒதுக்கி வைப்பீர். செயல்களில் தெளிவு உண்டாகும். பூரம்: உங்கள் செல்வாக்கு வெளிப்படும். சங்கடம் தீரும். மற்றவர்களால் சாதிக்க முடியாத ஒன்றை சாதிப்பீர்கள். உத்திரம் 1: குடும்ப நலனில் அக்கறை செலுத்துவீர். வருமானம் அதிகரிக்கும். நண்பரின் ஆலோசனை நன்மை தரும்.

கன்னி

உத்திரம் 2,3,4: அலுவலகத்தில் வேலை பளு உண்டாகும். அலைச்சல் அதிகரிக்கும். முயற்சியில் வெற்றி அடைவீர். அஸ்தம்: நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். பிரிந்து சென்ற உறவினர் மீண்டும் உங்களைத்தேடி வருவர். சித்திரை 1,2: நீண்டநாள் விருப்பம் நிறைவேறும். எதிர்பார்த்த வரவுகளால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

துலாம்:

சித்திரை 3,4: நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். நண்பர்கள் உதவியுடன் நீங்கள் நினைத்ததை அடைவீர். சுவாதி: துணிச்சலுடன் செயல்பட்டு நீங்கள் நினைத்ததை சாதிப்பீர். உங்கள் செயல் லாபத்தில் முடியும். விசாகம் 1,2,3: தன்னம்பிக்கை அதிகரிக்கும். எதிர்ப்புகளை சமாளித்து உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவீர்.

விருச்சிகம்

விசாகம் 4: எதிர்பார்த்த வரவு வரும்.சேமிப்பில் கவனம் செலுத்துவீர். பிள்ளைகள் எதிர்கால நலனில் அக்கறை காட்டுவீர். அனுஷம்: திட்டமிட்டு செயல்பட்டு வெற்றி காண்பீர். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர். கேட்டை: எதிர்பார்த்த தகவலும், கொடுத்து வைத்த பணமும் வரும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும்.

தனுசு

மூலம்: மனதில் தேவையற்ற குழப்பம் ஏற்படும். உங்கள் செயல்களில் தடுமாற்றமும் அலைச்சலும் உண்டாகும். பூராடம்: மனதில் குழப்பம் இருந்தாலும் முயற்சியில் எதிர்பார்த்த நன்மையை அடைவீர். செல்வாக்கு அதிகரிக்கும். உத்திராடம் 1: நீண்டநாள் பிரச்னை ஒன்றுக்கு தீர்வு காண்பீர். எதிர்காலம் குறித்த சிந்தனை மேலோங்கும்.

மகரம்

உத்திராடம் 2,3,4: அலைச்சல் அதிகரிக்கும். செலவுகள் செய்தும் ஒரு முயற்சி நிறைவேறாமல் இழுபறியாகும். திருவோணம்: புதிய முயற்சியை ஒத்தி வைப்பது நல்லது. உங்கள் செல்வாக்கை வெளிக்காட்ட செலவு செய்வீர். அவிட்டம் 1,2: செலவு அதிகரிக்கும். உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும்.தம்பதிகளிடையே ஏற்பட்ட பிரச்னை விலகும்.

கும்பம்

அவிட்டம் 3,4: உங்கள் முயற்சி வெற்றியாகும். வருவாய் அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி குறையும். சதயம்: பழைய முதலீட்டில் இருந்து எதிர்பார்த்த லாபம் வரும். உங்கள் விருப்பம் நிறைவேறும். பூரட்டாதி 1,2,3: வியாபாரத்தில் இருந்த தடை அகலும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த தகவல் வந்து சேரும்.

மீனம்

பூரட்டாதி 4: பணிபுரியும் இடத்தில் உண்டான பிரச்னை விலகும். உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். உத்திரட்டாதி: பண வரவில் ஏற்பட்ட பிரச்னைகளை சரி செய்வீர். உறவினர் ஒத்துழைப்பால் முயற்சி நிறைவேறும். ரேவதி: வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். மனதில் இருந்த குழப்பம் விலகும்.