டிசம்பர் மாத்தின் முதல் 10 நாட்களில் 50 ஆயிரம் சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
டிசம்பர் மாத்தின் முதல் 10 நாட்களில் 50 ஆயிரம் சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை!

டிசம்பர் மாதத்தின் முதல் 10 நாட்களில் 50 ஆயிரத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. 

குறித்த காலப்பகுதியில் 57,394 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது.  

சுற்றுலாப் பயணிகளின் மிகப்பெரிய குழு இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ளதுடன்,  ரஷ்யாவிலிருந்து 8,004 சுற்றுலாப் பயணிகளும், பிரித்தானியாவில் இருந்து 5,991 சுற்றுலாப் பயணிகளும், ஜேர்மனியிலிருந்து 5,336 சுற்றுலாப் பயணிகளும், சீனாவிலிருந்து 2,894 சுற்றுலாப் பயணிகளும் வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.  

அதன்படி, இந்த ஆண்டில் 13 லட்சத்து 34 ஆயிரத்து 345 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4