புதிய வரி நடைமுறை - தனியார் பேருந்து சேவையில் சிக்கல்!

#SriLanka #Bus #Tax
PriyaRam
2 years ago
புதிய வரி நடைமுறை - தனியார் பேருந்து சேவையில் சிக்கல்!

புதிய பெறுமதி சேர் வரியை 18 சதவீதத்தால் நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ள நிலையில், இந்த வரியானது, கட்டண உயர்வு விடயத்தில் தனியார் பேருந்து தொழிற்துறைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன இதனை தெரிவித்துள்ளார். கடந்த 25 வருடங்களில் தரமான தனியார் பேருந்துகளை இறக்குமதி செய்வதற்கு வரி விதிக்கப்படவில்லை.

ஆனால் சொகுசு பேருந்துகளை இறக்குமதி செய்யும் போது குறிப்பிட்ட வரி விதிக்கப்பட்டது தற்போது, டொலர் பெறுமதி உயர்வால், 5.5 மில்லியன் முதல் 7 மில்லியன் ரூபாய் வரை காணப்பட்ட நிலையான பேருந்தின் விலை, தற்போது 13.7 மில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

images/content-image/2023/12/1702528254.jpg

அத்துடன், தனியார்துறையிடம் முன்னர் 20 ஆயிரம் பேருந்துகள் காணப்பட்டன. தற்போது அவை 17 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளன. இதன்படி சுமார் 3,000 பேருந்துகளுக்கு பற்றாக்குறை நிலவுவதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் குறிப்பிட்டார். வரிகாரணமாக, பேருந்து ஒன்றின் விலை 15.7 மில்லியன் ரூபாவாக அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இந்த விலை உயர்வால், பேருந்து உரிமையாளர்களுக்கு பேருந்துகளை இறக்குமதி செய்வதற்கான வாய்ப்பு இல்லாமல் போகும். வற் வரிக்கு இணையாக, உதிரி பாகங்கள், உராய்வு எண்ணெய் மற்றும் சேவைகளின் விலையும் உயரும் எனவே கட்டணங்களையும் அதிகரிக்கவேண்டிய நிலை ஏற்படும்.

இந்த புதிய வற் வரியில் எரிபொருள் விலையும் சேர்க்கப்பட்டுள்ளதால், எரிபொருள் விலையும் அதிகரிக்கும் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இவற்றை கருத்தில் கொண்டால், பேருந்து கட்டணத்தில் அதிகரிப்பு காணப்படும். இது சாதாரண போக்குவரத்தை பயன்படுத்தும் மக்களை நேரடியாக பாதிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

எனினும் இந்த அனைத்து அதிகரிப்புகளுடனும், பேருந்து சேவையை தொடர முடியாத நிலை காணப்படுகிறது. இதன் காரணமாக, எதிர்வரும் ஜனவரி முதல் தனியார் பேருந்து சேவையில் புதிய வற் வரிமுறை திட்டவட்டமான வீழ்ச்சியை ஏற்படுத்தும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4