புதிய பதில் பொலிஸ்மா அதிபர் தொடர்பில் நீதிமன்று பிறப்பித்துள்ள உத்தரவு!

#SriLanka #Police #Court Order
PriyaRam
2 years ago
புதிய பதில் பொலிஸ்மா அதிபர் தொடர்பில் நீதிமன்று பிறப்பித்துள்ள உத்தரவு!

பதில் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் மற்றும் மூன்று பொலிஸ் அதிகாரிகளால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு 2 மில்லியன் ரூபாய் நட்டஈடு வழங்குமாறு உயர் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

2011 ஆம் ஆண்டு, மிரிஹான பொலிஸ் நிலையத்தில் ஒருவர் தடுத்து வைக்கப்பட்டிருந்த சம்பவம் தொடர்பான விசராணையின்போதே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.

மனுதாரரன டபிள்யூ. ரஞ்சித் சுமங்கல என்பவரை சட்டவிரோதமாக கைது செய்து, தடுத்துவைத்து, சித்திரவதைக்கு உட்படுத்தியதன் மூலம், தேசபந்து தென்னகோனின் மேற்பார்வையின் கீழ் இருந்த மிரிஹான பொலிஸ் நிலையத்தில் அவரது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

images/content-image/2023/12/1702554793.jpg

பதில் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் உட்பட நான்கு பொலிஸ் அதிகாரிகள், இதற்காக பாதிக்கப்பட்ட நபருக்கு சொந்த நிதியிலிருந்து 2 மில்லியன் ரூபாயை நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் என்றும் அரசாங்கம் மனுதாரருக்கு 1 இலட்சம் ரூபாயை இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் தொடர்புடைய அஜித் வனசுந்தர என்ற இராணுவத்தின் ஓய்வுபெற்ற சார்ஜன்ட் மேஜர் என்ற தனியார் தரப்பினரும் பொறுப்புக் கூறப்பட்டு நட்டஈடு வழங்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, தேசபந்து தென்னகோன் உட்பட அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு தேசிய பொலிஸ் ஆணைக்குழு உள்ளிட்ட அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் மேலும் உத்தரவிட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4