கன்னி ராசியினருக்கு ஜென்ம கேதுவால் கடவுள் சிந்தனை மேலோங்கும் - இன்றைய ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan #Lanka4
Prasu
4 months ago
கன்னி ராசியினருக்கு ஜென்ம கேதுவால் கடவுள் சிந்தனை மேலோங்கும் - இன்றைய ராசிபலன்

மேஷம்

அசுவினி: உடல்நிலை சீராகும். நீங்கள் எதிர்பார்த்த பணம் வரும். வியாபாரத்தில் புதிய பாதை தெரியும். பரணி: வழக்கு வெற்றியாகும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை சரி செய்வீர். நெருக்கடி விலகும். கார்த்திகை 1: முயற்சியில் உண்டான தடை விலகும். திட்டமிட்டிருந்த பணிகளை நிறைவேற்றி முடிப்பீர்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: தடைகளைத் தாண்டி ஒரு செயலில் லாபம் காண்பீர். உங்கள் எதிர்பார்ப்பு எளிதாக நிறைவேறும். ரோகிணி: திட்டமிட்டு செயல்படுவீர். அலைச்சல் அதிகரிக்கும். தொழிலில் தடை உண்டாகும். மிருகசீரிடம் 1,2: உங்கள் முயற்சி இழுபறியாகும். பயணத்தில் சங்கடம் ஏற்படும். மனதில் குழப்பம் உண்டாகும்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: காலையில் உங்கள் முயற்சியில் எதிர்பார்த்த வெற்றியைக் காண்பீர். பயணத்தில் எச்சரிக்கை தேவை. திருவாதிரை: வியாபாரத்தில் கவனமாக செயல்பட்டு லாபம் அடைவீர். இன்று மேற்கொள்ளும் முயற்சி ஆதாயம் தரும். புனர்பூசம் 1,2,3: நண்பர்கள் துணையுடன் எதிர்பார்ப்பு நிறைவேறும். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர் விலகுவர்.

கடகம்

புனர்பூசம் 4: எதிர்ப்பு விலகும். குடும்பத்தினர் ஆதரவுடன் நேற்றைய பிரச்னை ஒன்றில் முடிவு காண்பீர். பூசம்: உறவுகளிடம் உண்டான பிரச்னைகளை பேசி தீர்ப்பீர். உங்கள் முயற்சியில் ஆதாயம் காண்பீர். ஆயில்யம்: உங்கள் எண்ணம் நிறைவேறும். போட்டியாளர் விலகிச் செல்வர். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.

சிம்மம்

மகம்: துணிச்சலுடன் செயல்பட்டு முயற்சியில் வெற்றி காண்பீர். விருந்தினரால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். பூரம்: குலதெய்வ அருள் உண்டாகும். உடல் நிலையில் இருந்த சங்கடம் விலகும். உற்சாகத்துடன் செயல்படுவீர். உத்திரம் 1: வருமானத்தில் ஏற்பட்ட தடை நீங்கும். எதிர்பார்த்த ஆதாயம் வரும். உடல்நிலையில் கவனம் தேவை.

கன்னி

உத்திரம் 2,3,4: உங்கள் முயற்சியில் தடைகளை சந்தித்தாலும் போராடி வெல்வீர். பொருளாதார நிலை உயரும். அஸ்தம்: விலகிச்சென்ற உறவினர் தேடி வருவர். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும். வருமானம் அதிகரிக்கும். சித்திரை 1,2: எதிர்பார்த்த தகவல் வரும். ஜென்ம கேதுவால் கடவுள் சிந்தனை மேலோங்கும்.பணம் வீடு தேடி வரும்.

துலாம்

சித்திரை 3,4: மனதில் துணிச்சல் அதிகரிக்கும். உங்கள் தேவை நிறைவேறும். பகைவர்களின் தொல்லை விலகும். சுவாதி: குரு பகவான் வக்கிரம் அடைந்திருப்பதால் யோசிக்காமல் செயல்படுவீர். தொழிலில் அதிக முதலீடு வேண்டாம். விசாகம் 1,2,3: உங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள கடுமையான முயற்சியை மேற்கொள்வீர்.

விருச்சிகம்

விசாகம் 4: பண வரவு அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். பெரியோரின் ஆசி நிறைவேறும். அனுஷம்: குடும்பத்தினர் விருப்பத்தை நிறைவேற்றுவீர். எதிர்பார்த்த வரவு வரும். புதிய பொருள் சேர்க்கை உண்டாகும். கேட்டை: உங்கள் திறமை வெளிப்படும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். மேற்கொள்ளும் முயற்சி வெற்றி பெறும்.

தனுசு

மூலம்: குடும்பத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். மகிழ்ச்சி அதிகரிக்கும். எதிர்பார்த்த வரவு வரும். பூராடம்: நேற்றுவரை மனதில் இருந்த குழப்பம் விலகும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். உத்திராடம் 1: செயல்களில் இருந்த தடை விலகும். வியாபாரத்தில் லாபம் காண்பீர். நேற்றைய பணம் வரும். 

மகரம்

உத்திராடம் 2,3,4: மதியம் வரையில் உங்கள் செயல்களில் சங்கடம் தோன்றும். முயற்சி லாபமாகும். திருவோணம்: அலைச்சல் அதிகரிக்கும். உங்கள் முயற்சி இழுபறியாகும். மனதில் குழப்பம் ஏற்பட்டு விலகும். அவிட்டம் 1,2: திட்டமிட்ட செயல்களில் கூட எதிர்பார்த்த லாபத்தைக் காண முடியாமல் போகும். 

கும்பம்

அவிட்டம் 3,4: உங்கள் செயல்களில் மதியம் வரை லாபம் உண்டாகும். மாலையில் திடீர் செலவு தோன்றும். சதயம்: எதிர்பார்த்த பணம் வரும். செலவு அதிகரிக்கும். பிரச்னை உங்களைத்தேடி வரும். பூரட்டாதி 1,2,3: உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். நண்பர் உதவியால் முயற்சி வெற்றியாகும். 

மீனம்

பூரட்டாதி 4: உங்கள் முயற்சி லாபம் தரும். எதிர்பார்ப்பு எளிதாக நிறைவேறும். தம்பதிகள் அனுசரித்து செல்வர். உத்திரட்டாதி: ஜென்ம ராகுவால் உங்கள் விருப்பம் நிறைவேறும். குரு பகவானால் செயல்களில் நிதானம் தேவை. ரேவதி: லாப சனியால் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். தொழிலை விரிவு செய்ய திட்டமிடுவீர்.