சர்வதேச திரைப்பட விழா யாழ்ப்பாணத்தில் கோலாகலமாக ஆரம்பம்!

#SriLanka #Jaffna #Cinema #International #Film
Mayoorikka
2 years ago
சர்வதேச திரைப்பட விழா யாழ்ப்பாணத்தில் கோலாகலமாக ஆரம்பம்!

இலங்கையில் ஒன்பதாவது சர்வதேச திரைப்பட விழா யாழ்ப்பாணத்தில் பண்பாட்டு மையத்தில் மிகவும் கோலாகலமாக நேற்றைய தினம் மாலை ஆரம்பமாகியது.

 நேற்று ஆரம்பித்துள்ள திரைப்பட விழா எதிர்வரும் 19 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதுடன் திரையிடல்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கு, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட கருத்தரங்கு மண்டபம், கலம், கார்கிர்ல்ஸ் சதுக்கத்தில் உள்ள றீகல் திரையரங்கில் நடைபெறவுள்ளன.

 சுயாதீன திரைப்படக்கலைஞர்களை ஊக்குவிக்கும் யாழ்ப்பாண சர்வதேச திரைப்பட விழா இலங்கையில் இடம்பெறும் ஒரேயொரு சர்வதேச திரைப்பட விழாவாகும்.

images/content-image/2023/12/1702598836.jpg

 இம்முறையும் பல சர்வதேச குறும்படங்களுடன் நம்மவர்களின் குறும்படங்கள் போட்டியிடுகின்றன. அத்துடன் நம்மவர்களின் திரைப்படங்களான மதிசுதாவின் வெந்து தணிந்தது காடு, ஈழவாணியின் லூசி, காரை சிவநேசனின் புஷ்பக27 ஆகியனவும் திரையிடப்படுகின்றன.

 இந்நிகழ்வில் இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் ஹிடேகி மிசுகோஷி, சுவிட்சர்லாந்தின் தூதுவர் சிறி வால்ட், தென்னாபிரிக்காவின் உயர் ஸ்தானிகர் சடைல் ஷால்க், யாழிற்கான இந்தியத் துணைத்தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன், ஜேர்மன் கலாசார மத்திய நிலையத்தின் அதிகாரி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிறீசற்குணராஜா, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம், விழா இயக்குனர் அனோமா ராஜகருணா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

images/content-image/2023/1702598864.jpg

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4