பல பிரதேசங்களில் இன்று மழை பெய்யக்கூடும்! வளிமண்டலவியல் திணைக்களம்

#SriLanka #weather #Rain
Mayoorikka
2 years ago
பல பிரதேசங்களில் இன்று மழை பெய்யக்கூடும்!  வளிமண்டலவியல் திணைக்களம்

நாட்டில் இன்றும் (15) பல பிரதேசங்களில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 இதன்படி, தென், கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மாத்தளை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யுக்கூடும் என அந்த திணைக்களம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது.

 வவுனியா, கிளிநொச்சி, மன்னார் மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும். ஏனைய பிரதேசங்களில் இன்று பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் பரவலாக மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். தென், ஊவா, மேற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் சுமார் 100 மில்லிமீற்றர் வரையான பலத்த மழை பெய்யக்கூடும்.

 மேற்கு, சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான வானிலை காணப்படும். இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம், பொது மக்களிடம் கோரியுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4