கடக ராசியினருக்கு வாழ்க்கைத் துணையால் வளம் உண்டாகும் - ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
4 months ago
கடக ராசியினருக்கு வாழ்க்கைத் துணையால் வளம் உண்டாகும் - ராசிபலன்

மேஷம்

அசுவினி: தடைபட்டிருந்த வேலை முடியும். எதிர்பார்ப்பு நிறைவேறும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். பரணி: நேற்றைய எண்ணம் பலிக்கும். பணிபுரியும் இடத்தில் இருந்த பிரச்னை விலகும். கார்த்திகை 1: எதிர்பார்த்த தகவல் வரும்.வியாபாரத்தில் புதிய வழிமுறைகளைக் கண்டறிவீர்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: வருவாயில் இருந்த தடை விலகும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி லாபமாகும். ரோகிணி: பெரியோர் ஆலோசனையுடன் நீங்கள் நினைத்ததை செய்து முடிப்பீர். மகிழ்ச்சி அதிகரிக்கும். மிருகசீரிடம் 1,2: வியாபார நெருக்கடி விலகும். புதிய நட்புகளால் ஆதாயம் காண்பீர்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: முயற்சியில் சங்கடம் உண்டானாலும் இறுதியில் வெற்றி அடைவீர். பண நெருக்கடி விலகும். திருவாதிரை: பணிபுரியும் இடத்தில் எதிர்ப்பு உண்டாகி உங்களுக்கு மனக்குழப்பம் உண்டாகும். புனர்பூசம் 1,2,3: திடீர் பயணத்தால் பல வகையிலும் அலைச்சல் அதிகரிக்கும். சோர்வு ஏற்படும்.

கடகம்

புனர்பூசம் 4: குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். புதிய பொருள் சேர்க்கையும் நிம்மதியும் உண்டாகும். பூசம்: எதிர்பார்த்த வருவாய் வரும். வாழ்க்கைத் துணையால் வளம் உண்டாகும். வழக்கு சாதகமாகும். ஆயில்யம்: விருப்பம் நிறைவேறும். எதிர்பார்த்த தகவல் வரும். நிதிநிலை உயரும்.

சிம்மம்

மகம்: முயற்சியில் வெற்றி காண்பீர். நேற்றைய பிரச்னைக்கு முடிவு காண்பீர். பூரம்: மனக்குழப்பம் விலகும். துணிச்சலாக செயல்பட்டு நினைத்ததை அடைவீர். செல்வாக்கு உயரும். உத்திரம் 1: சுறு சுறுப்பாக செயல்படுவீர். தடைகளை நீக்கி ஆதாயம் அடைவீர். நெருக்கடி நீங்கும்.

கன்னி

உத்திரம் 2,3,4: முயற்சி நிறைவேறும். எதிர்பார்த்த வருமானம் வரும். நிதிநிலை உயரும். அஸ்தம்: குடும்பத்தினர் ஆதரவுடன் முயற்சியில் வெற்றி காண்பீர். பிள்ளைகளால் நன்மை உண்டு. சித்திரை 1,2: எதிர்பாராத வருவாய் தேவையை பூர்த்தி செய்யும். பெரியோர் ஆதரவு நன்மை தரும்.

துலாம்

சித்திரை 3,4: உங்கள் பலம் மற்றவர்களுக்கு தெரிய வரும். செயல்களில் ஆதாயம் உண்டாகும். சுவாதி: பிறரின் ஆலோசனைக்கு இடம் கொடுக்காமல் செயல்படுவீர்கள். சங்கடம் நீங்கும். விசாகம் 1,2,3: செயலில் நீங்கள் எதிர்பார்த்த லாபத்தை அடைவீர். போட்டியாளர் விலகுவர். 

விருச்சிகம்

விசாகம் 4: துணிச்சலுடன் செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். உங்கள் எண்ணம் நிறைவேறும். அனுஷம்: வருவாய் அதிகரிக்கும். பழைய கடன்களை அடைப்பீர். நேற்றைய பிரச்னை முடியும். கேட்டை: வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். திறமை வெளிப்படும். எதிர்பார்ப்பு நிறைவேறும்.

தனுசு

மூலம்: குழப்பம் விலகி தெளிவு ஏற்படும். பணவரவால் குடும்பத்தில் நிம்மதியான நிலை உண்டாகும். பூராடம்: உங்கள் செயலில் சாதகமான நிலை ஏற்படும். வரவு அதிகரிக்கும். திட்டமிட்டு செயல்படுவீர்கள். உத்திராடம் 1: கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். 

மகரம்

உத்திராடம் 2,3,4: தேவையற்ற குழப்பம் அதிகரிக்கும். செயல்களில் கவனம் செலுத்த முடியாமல் போகும். திருவோணம்: உங்கள் மனதை மாற்றக்கூடிய வகையில் சிலரின் செயல்பாடு இருக்கும். அவிட்டம் 1,2: நேற்றைய முயற்சி இன்று ஆதாயம் தரும். தொழிலில் வருமானம் அதிகரிக்கும். 

கும்பம்

அவிட்டம் 3,4: எதிர்பார்த்தவற்றில் தடை உண்டாகும். வரவு செலவில் நிதானம் அவசியம். சதயம்: செயல்களில் சங்கடம் தோன்றும். நினைப்பது ஒன்றாகவும் நடப்பது வேறாகவும் மாறும். . பூரட்டாதி 1,2,3: செலவுகளால் நெருக்கடி அதிகரிக்கும் என்றாலும் அதை சமாளிப்பீர்கள். 

மீனம்

பூரட்டாதி 4: ஜென்ம ராகுவால் உங்கள் மனதில் குழப்பம் அதிகரிக்கும். குடும்பத்தில் சல சலப்பு தோன்றி மறையும். உத்திரட்டாதி: எதிர்பார்த்த வருமானம் வரும். வாழ்க்கைத் துணையிடமும் இடைவெளி உண்டாகும். ரேவதி: நண்பர் வழிகாட்டுதலால் விருப்பம் நிறைவேறும். வெளிநாட்டு முயற்சி வெற்றியாகும்.