இந்தியாவில் ரயில் நிலையத்தில் சிக்கிக்கொண்ட பயணிகள்!
#India
#SriLanka
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

இந்தியாவின் தமிழகத்தில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக ரயிலில் பயணம் செய்த 500க்கும் மேற்பட்ட பயணிகள் ரயில் நிலையத்தில் சிக்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
திருச்செந்தூரில் இருந்து சென்னை நோக்கி சென்ற ரயில் வெள்ளத்தில் சிக்கியது. தமிழகம் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் வெள்ளம் காரணமாக தண்டவாளங்கள் சேதமடைந்ததால் ரயில்கள் இரத்து செய்யப்பட்டிருந்தன. இதனால் பயணிகள் ரயில் நிலையங்களில் சிக்கிக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இருப்பினும், ரயிலில் பயணம் செய்த கிட்டத்தட்ட 300 பயணிகளை மீட்புக் குழுவினர் காப்பாற்றியுள்ளனர். சீரற்ற காலநிலை காரணமாக இன்று தற்காலிகமாக நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், நாளைய தினம் பணிகள் ஆரம்பிக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



