மலையகம் ஊடான ரயில் போக்குவரத்து தாமதமாகலாம் என முன்னறிவிப்பு!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
மலையகம் ஊடான ரயில் போக்குவரத்து தாமதமாகலாம் என முன்னறிவிப்பு!

ஹப்புத்தளை மற்றும் தியத்தலாவைக்கு இடையில் இன்று (19.12) காலை புகையிரத பாதையில் மண்மேடு சரிந்து விழுந்ததில் மலையக ரயில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.  

இதன் காரணமாக கொழும்பில் இருந்து பதுளை நோக்கி பயணித்த இரவு நேர அஞ்சல் புகையிரதம் ஹப்புத்தளையில் நிறுத்தப்பட்டதாக  தெரிவிக்கப்படுகிறது. 

ரயில் இயக்கத்தில் ஏற்பட்ட இடையூறு காரணமாக மலையகப் பாதையில் ரயில் போக்குவரத்து சில மணி நேரம் தாமதமாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4