வரலாறு கலாசாரத்தில் ஆழமாக இணைக்கப்பட்டுள்ள இலங்கை-இந்தியா - இருநாட்டு சபாநாயகர்களின் முக்கிய சந்திப்பு!

#India #SriLanka #Parliament #Meeting #speaker
PriyaRam
2 years ago
வரலாறு கலாசாரத்தில் ஆழமாக இணைக்கப்பட்டுள்ள இலங்கை-இந்தியா - இருநாட்டு சபாநாயகர்களின் முக்கிய சந்திப்பு!

சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன நேற்று இந்திய மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவைச் சந்தித்தார்.

இதன்போது இந்தியாவின் வளர்ச்சி பாதையில் இலங்கை தொடர்ந்து முக்கிய பங்காளியாக இருக்க வேண்டும் என பிர்லா வலியுறுத்தியுள்ளார்.

இதன்போது இரு நாடுகளும் பொருளாதார ரீதியிலும் சுற்றுலாத் தலங்களிலும் ஆழமாக இணைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட பிர்லா, நீண்ட காலமாக வளர்க்கப்பட்ட உறவுகள் காலப்போக்கில் வலுவடையும் என்றும் நம்பிக்கை வெளியிட்டார்.

இரு நாடுகளும் நெருங்கிய அண்டை நாடுகள் மட்டுமல்ல, வரலாறு, கலாசாரம் மற்றும் ஜனநாயக விழுமியங்களின் பாதுகாவலர்கள் என்றும் அவர் கூறினார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4