சீரற்ற வானிலை : நாடு முழுவதும் 11 ஆயிரம் பேர் பாதிப்பு!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
சீரற்ற வானிலை : நாடு முழுவதும் 11 ஆயிரம் பேர் பாதிப்பு!

நிலவும் மோசமான காலநிலை காரணமாக, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் எட்டாயிரம் பேர் உட்பட நாடு  முழுவதும் கிட்டத்தட்ட 11 ஆயிரம்  பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இந் நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் 8 பாடசாலைகளும் கிளிநொச்சியில் 5 பாடசாலைகளும் தற்காலிகமாக மூடப்பட்டு நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

இதேவேளை, முல்லைத்தீவு மாவட்டத்தில் 5000 ஏக்கருக்கும் அதிகமான நெற்செய்கைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

முல்லைத்தீவு மற்றும் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தைச் சேர்ந்த இராணுவத்தினர் வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளதுடன், மீட்கப்பட்ட வீரர்கள் தற்காலிக தடுப்பு முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4