சனி விலகுவதால் தைரியத்துடன் செயல்படும் மகர ராசியினர் - ராசிபலன்

#Sri Lanka President #Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
4 months ago
சனி விலகுவதால் தைரியத்துடன் செயல்படும் மகர ராசியினர் - ராசிபலன்

மேஷம்

அசுவினி: லாப சனியால் கோயிலுக்கு செல்வீர்கள். சந்திரனால் எதிர்பாராத செலவு தோன்றும். பரணி: திட்டமிட்டிருந்த வேலையை செய்து முடிப்பீர். குடும்பத்தினர் விருப்பத்தை நிறைவேற்றுவீர். கார்த்திகை 1: புதிய முயற்சிகளில் கவனம் தேவை. வரவை விட செலவு அதிகரிக்கும்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: எதிர்பார்த்த தகவல் வரும். பண வரவு உண்டாகும். குடும்ப சங்கடம் நீங்கும். ரோகிணி: வியாபாரத்தில் இருந்த தடை விலகும்.உங்கள் முயற்சியில் எதிர்பார்த்த ஆதாயம் உண்டு. மிருகசீரிடம் 1,2: அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னைமுடிவிற்கு வரும். செல்வாக்கு உயரும்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: பாக்கிய சனியாலும் லாப குருவாலும் உங்கள் முயற்சி வெற்றியாகும். எதிர்பார்த்த தகவல் வரும். திருவாதிரை: நண்பர் உதவியுடன் முயற்சியில் லாபம் காண்பீர். வெளியில்செல்வாக்கு உயரும். புனர்பூசம் 1,2,3: பொது நலனில் கவனம் தேவை.பொருளாதார நிலை உயரும். எதிர்பார்ப்பு நிறைவேறும்.

கடகம்

புனர்பூசம் 4: நேற்று இருந்து நெருக்கடி நீங்கும். குடும்பத்தேவைகளை நிறைவேற்றுவீர்கள். பூசம்: உங்கள் திறமை வெளிப்படும். திட்டமிட்டு செயல்பட்டு முயற்சியில் ஆதாயம் காண்பீர். ஆயில்யம்: குடும்பத்தினர் ஆதரவு அதிகரிக்கும். வியாபாரத்தை விரிவு செய்வீர்.

சிம்மம்

மகம்: சந்திராஷ்டமம் என்பதால் செயல்களில் இழுபறி உண்டாகும். செயல்களில் விழிப்புணர்வு அவசியம். பூரம்: வெளியூர் பயணத்தில் எதிர்பார்த்த நன்மையை அடைய முடியாமல் போகும். முயற்சியில் கவனம் தேவை. உத்திரம் 1: புதிய முயற்சிஇழுபறியாகும். வருவாயில் தடை ஏற்படும். கவனம் அவசியம்.

கன்னி

உத்திரம் 2,3,4: குடும்பத்தினர் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர். எண்ணம் நிறைவேறும். அஸ்தம்: தம்பதிகளுக்குள் ஏற்பட்ட பிரச்னைதீரும். மகிழ்ச்சி அதிகரிக்கும். பணவரவு திருப்தி தரும். சித்திரை 1,2: நண்பர்கள் ஆதரவுடன் முயற்சியில் வெற்றி காண்பீர். எதிர்பார்ப்பு நிறைவேறும்.

துலாம்

சித்திரை 3,4: எதிர்ப்பு விலகும். சங்கடங்கள் விலகி சுறுசுறுப்பாக செயல்படுவீர். சுவாதி: தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர். முயற்சியில் முன்னேற்றம் காண்பீர்கள். விசாகம் 1,2,3: தைரியத்துடன் செயல்படுவீர். இழுபறியாக இருந்த வழக்கு முடியும்.

விருச்சிகம்

விசாகம் 4: பிள்ளைகளிடம் இருந்து எதிர்பார்த்த தகவல் வரும். அவர்கள் நிலையில் உயர்வு தோன்றும். அனுஷம்: குடும்பத்தில் உண்டான நெருக்கடி நீங்கும். பெரியோர் ஆதரவு அதிகரிக்கும். கேட்டை: பிரபலங்களின் ஆதரவால் விருப்பம் நிறைவேறும். நீங்கள் எண்ணியதை அடைவீர்கள்.

தனுசு

மூலம்: குரு பகவான் வக்கிர நிவர்த்தி அடைவதால் தடை நீங்கும். மனதில் இருந்த குழப்பம் விலகும். பூராடம்: தாய்வழி உறவுகளுடன் ஏற்பட்ட பிரச்னை விலகும். நீங்கள் எண்ணியதை நடத்தி முடிப்பீர். உத்திராடம் 1: உங்கள் செயலில் ஏற்பட்ட தடை விலகும். எதிர்பார்ப்பு நிறைவேறும்

மகரம்

உத்திராடம் 2,3,4: ஜென்ம ராசியை விட்டு சனி விலகுவதால் தைரியத்துடன் செயல்படுவீர். எண்ணம் நிறைவேறும். திருவோணம்: திட்டமிட்டு செயல்பட்டு லாபமடைவீர். நெருக்கடி நீங்கும். உங்கள் செல்வாக்கு உயரும். அவிட்டம் 1,2: தன்னம்பிக்கை அதிகரிக்கும். உங்கள் எண்ணத்தை நிறைவேற்றிக் கொள்வீர்.

கும்பம்

அவிட்டம் 3,4: எதிர்பார்த்த வரவு வரும். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடிகளை சரி செய்வீர். சதயம்: நேற்றுவரை இருந்த நெருக்கடி நீங்கும். துணிச்சலுடன் செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். பூரட்டாதி 1,2,3: உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும்.

மீனம்

பூரட்டாதி 4: விரய சனி தொடங்குவதால் செயல்களில் தடுமாற்றம் ஏற்படும். தேவையற்ற குழப்பம் வரும். உத்திரட்டாதி: வேலை பளுவால் சங்கடங்களுக்கு ஆளாவீர். எல்லாவற்றையும் சமாளிப்பீர்கள். ரேவதி: திட்டமிட்ட செயல்களில் குழப்பம் ஏற்படும். எதையோ இழந்ததுபோல் சங்கடம் உண்டாகும்.