கொலை மிரட்டல் விடுத்து கப்பம் கோரிய நபர் ஒருவர் கைது!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
கொலை மிரட்டல் விடுத்து கப்பம் கோரிய நபர் ஒருவர் கைது!

கொலை மிரட்டல் விடுத்து 5 கோடி ரூபா கப்பம் கோரிய சந்தேகநபர் ஒருவரை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். 

மிரிஹான பொலிஸ் நிலையத்தில் கிடைத்த முறைப்பாட்டையடுத்து, சந்தேகநபர் நேற்று (20.12) குடபத்கமுவ அங்கொட பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். 

அதே பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 

சந்தேகநபருக்கும் முறைப்பாட்டுதாரருக்கும் இடையில் காணி பிரச்சினை காரணமாக சந்தேகநபர் வெளி நாட்டில் உள்ள தனது மருமகன் ஒருவரின் ஊடாக இந்த கொலை மிரட்டல்களை விடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது. 

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4