போதையில் மனைவியின் கன்னத்தை கடித்த கணவன்

#India #Arrest #Women #Hospital #Attack #husband #Karnataka
Prasu
1 year ago
போதையில் மனைவியின் கன்னத்தை கடித்த கணவன்

குடிபோதையில் மனைவியின் கண் இமை மற்றும் கன்னச் சதையை கடித்து துப்பிய கணவர், தடுக்க வந்த மகளையும் கொடூரமாக தாக்கிய சம்பவம் பெல்தங்கடியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம், பெல்தங்கடி தாலுகாவைச் சேர்ந்தவர் சுரேஷ் கவுடா. மது பழக்கத்திற்கு அடிமையான சுரேஷ் கவுடா அடிக்கடி குடித்து விட்டு வந்து குடும்பத்தினருடன் தகராறு செய்வார் என்று தெரிகிறது.

இந்த நிலையில், நேற்று குடிபோதையில் வந்த சுரேஷ் கவுடா, மனைவி, மகளைத் தாக்கினார். அப்போது திடீரென மனைவியின் கண் மற்றும் முகத்தை கடித்து சதையைத் துப்பினார். அத்துடன் மனைவியை கட்டையால் தாக்கியுள்ளார்.

இதைத் தடுக்க முயன்ற மகளையும் கொடூரமாக தாக்கினார். இதனால் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள தப்பியோடிய அவரது மகள், அக்கம் பக்கத்தினரிடம் விஷயத்தைக் கூறினார். அவர்கள் விரைந்து வந்து மயங்கிய நிலையில் கிடந்த அவரது தாயையும், மகளையும் உஜிராவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

 இந்த சம்பவம் தொடர்பாக தர்மஸ்தலா காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் தப்பியோடிய சுரேஷ் கவுடாவை பொலிஸார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!