தமிழ் ஈழம் என்ற பெயரை வைத்தவர் யார்? எப்படி உருவாகியது? உள்ளே அரியனேந்திரனின் பதில். உங்கள் பதில் என்ன?

#SriLanka #Batticaloa #Tamil #sri lanka tamil news #language #historic
Prasu
11 months ago
தமிழ் ஈழம் என்ற பெயரை வைத்தவர் யார்? எப்படி உருவாகியது? உள்ளே அரியனேந்திரனின் பதில். உங்கள் பதில் என்ன?

#தமிழீழம் என்ற சொல் முதன்முதலில் தோற்றம்பெற்றது மட்டக்களப்பில்தான், முதலில்‌ “ஈழத்‌ தமிழகம்‌" என்ற சொல்தான்‌ வழக்கில்‌ இருந்தது. ஈழ தேசியப்பண் பாடிய பரமஹம்ச தாசர் "வாழ்க "ஈழத்‌ தமிழகம்‌" வாழ்க இனிது வாழ்கவே!" என்று பாடினார்‌.

பிறகு "தமிழிலங்கை" என்ற சொல்‌லும்‌ வழங்கப்பட்டது. 1960ஆம்‌ ஆண்டில்‌ பச்சையப்பன்‌ கல்லூரியில்‌ கவிஞர்‌ காசி ஆனந்தன் படித்தபோது சி. பா. ஆதித்தனார். அவர்களின்‌ தொடர்பு. ஏற்பட்டது. அப்போது அவரைப்‌ பற்றி எழுதிய பாடலில்‌ இச்சொல்லைப்‌ பயன்படுத்தினார்‌.

"அலைகடலுக்கு அப்பாலும்‌ "தமிழிலங்கை" மண்ணில்‌ அரசமைக்க வழி சொன்னான்‌ அவனன்றோ தலைவன்‌" 1972ஆம்‌ ஆண்டு, மே மாதம்‌, 19ஆம்‌ நாள்‌ மட்டக்களப்பில்‌ தமிழர்‌ கூட்டணி அமைப்பு மாநாடு நடைபெற்றது. 

images/content-image/1703191842.jpg

மாநாட்டின்‌ பொறுப்பைக்‌ கவிஞர்‌ காசி ஆனந்தன்‌ ஏற்றிருந்தார்‌. மாநாட்டு மேடையில்‌ கட்டப்பட்டிருந்த பதாகையில், "தமிழீழம்‌-தமிழர்‌ தாகம்‌" எனப்‌ பெரிதாக எழுதிக்‌ கட்டப்பட்டிருந்தது இந்த மாநாட்டில்‌ கலந்துகொண்ட தலைவர்களையும்‌ மக்களையும்‌ இச்‌ சொற்றொடர்‌ மிகவும்‌ கவர்ந்தது.

மக்களிடையே "தமிழீழம்‌'" என்ற சொல்‌ நாளடைவில்‌ பரவி நிலைத்தது.! 1976, மே,14,ல் வட்டுக்கோட்டை தீர்மானத்தில் தமிழீழக் கோரிக்கை தந்தை செல்வாவால் முன்வைக்கப்பட்டது..! 

அந்த தீர்மானம் 1977,யூலை,21 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் நிலைப்பாடாக முன்வைக்கப்பட்டு வடகிழக்கில் 23, தொகுதிகளில் போட்டியாட்டு 18, தொகுதிகளில் அறுதிப்பெரும்பான்மைவாக்கினை பெற்று தமிழ் தேசிய இனத்தின் ஆதரவினை இது பெற்றது. !

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!