இவ்வாண்டில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் குழு மோதல்கள் அதிகம் பிரான்ஸில் நிகழ்ந்துள்ளது

#Police #France #Attack #Lanka4 #பொலிஸ் #லங்கா4 #பிரான்ஸ் #France Tamil News #Tamil News
Mugunthan Mugunthan
8 months ago
இவ்வாண்டில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் குழு மோதல்கள் அதிகம் பிரான்ஸில் நிகழ்ந்துள்ளது

கடந்த 2022ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2023ம் ஆண்டு வன்முறைகள், குழு மோதல்கள், அதிக ஆயுதப் பாவனைகள் அதிகரித்துள்ள ஆண்டாகவுள்ளது என பிரான்ஸ் காவல்துறை தலைமை அலுவலகம் தெரிவித்துள்ளது.

 அதில் ஏனைய மாகாணங்களோடு ஒப்பிடுகையில் 'Ile-de-France' எனப்படும் பரிசையும், பரிசை அண்டியுள்ள பகுதிகளே அதிக வன்முறைகள் அதிகரித்த மாகாணமாக உள்ளது என தலைமையகம் தன் வருடாந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

 குழுக்களுக்கிடையில் நடைபெறும் வன்முறைகளில் ஈடுபடும் இளையோர்களில் பலர் 12 வயதுக்கு குறைவானவர்கள் இருப்பதும், கைதுகள், சிறைத்தண்டனைகள் மூலம் அவர்களின் கல்வி மிக்க மோசமாக பதிக்கப்படுவதும் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது.

images/content-image/1703232305.jpg

 அத்தோடு அவர்களின் கைகளில் மிக ஆபத்தான ஆயுதங்கள் இருப்பதும், அதிகப்படியான கொலைகள் அதிகரித்து இருப்பதும் இளையோரை சரியான முறையில் வழிநடத்தப் படவில்லை என்பதை காட்டுகிறது.

 எனவே பாடசாலைகளும், பெற்றோரும் பிள்ளைகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என காவல்துறை தலைமை அலுவலகம் தன் வருடாந்த அறிக்கையில் வேண்டுகோள் விடுத்துள்ளது.