கனேடிய பிரதமர் வீடு கட்டுவோருக்குரிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண உத்தேசம்
#PrimeMinister
#Canada
#Home
#Lanka4
#வீடு
#லங்கா4
#Canada Tamil News
#Tamil News
Mugunthan Mugunthan
1 year ago

கனடாவில் வீடு நிர்மானிப்போருக்கு மகிழ்ச்சியான தகவல் ஒன்றை பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ வெளியிட்டுள்ளார். நாட்டில் நிலவி வரும் வீட்டுப் பிரச்சினைக்கு தீர்வு காணும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் உறுதியளித்துள்ளார்.
வருட இறுதியை முன்னிட்டு வழங்கிய நேர்காணல் ஒன்றில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். கனடாவில் வீடு நிர்மானிப்போருக்கு, குறைந்தளவு வட்டியுடனான கடன் வசதிகள் செய்து கொடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
ஜீ7 நாடுகளில் கனடா பொருளாதார ரீதியில் சிறந்த நிலையில் காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
மக்கள் பொருளாதார ரீதியில் பல்வேறு சவால்களை எதிர்நோக்கி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மக்களுக்கு அரசாங்கம் உதவிகளை வழங்கி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.



