ஊக்கமருந்து குற்றச்சாட்டில் இரண்டு ஜிம்பாப்வே கிரிக்கெட் வீரர்கள் இடைநீக்கம்
#Hospital
#drugs
#Cricket
#sports
#Tamilnews
#Player
#suspend
#Zimbabwe
Prasu
1 year ago
ஊக்கமருந்து தடுப்புச் சட்டத்தை மீறியதாகக் குற்றம்சாட்டி, ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் இரண்டு வீரர்கள் மீது அந்நாட்டு கிரிக்கெட் நிர்வாகக் குழு தடை விதித்துள்ளது.
ஜிம்பாப்வே கிரிக்கெட் சட்டத்தின் கீழ் வெஸ்லி மாடவேரே மற்றும் பிராண்டன் மௌட்டா ஆகியோர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த இரண்டு வீரர்களும் சமீபத்தில் அயர்லாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான ஜிம்பாப்வே அணியை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளனர்.
இதேவேளை, அடுத்த வருடம் நடைபெறவுள்ள இருபதுக்கு 20 உலகக் கிண்ணப் போட்டிக்கு ஜிம்பாப்வே அணி தகுதிபெறத் தவறியதன் காரணமாக பயிற்சியாளர் டேவ் ஹொட்டன் பதவி விலகியுள்ளார்.