வைகோவினால் கேட்கப்பட்ட இந்திய மீனவர் பிரச்சினைக்கு ஒன்றிய அமைச்சர் முரளிதரனின் பதில்

#India #Fisherman #Lanka4 #அரசியல் #லங்கா4 #இந்தியா
Mugunthan Mugunthan
11 months ago
வைகோவினால் கேட்கப்பட்ட இந்திய மீனவர் பிரச்சினைக்கு ஒன்றிய அமைச்சர் முரளிதரனின் பதில்

இலங்கை கடற்படையினரால் தொடர் தாக்குதலுக்கு உள்ளாகும் தமிழக மீனவர் பிரச்சினைக்கு தீர்வு என்ன என்று வைகோ கேள்விக்கு ஒன்றிய அமைச்சர் முரளீதரன் பதிலளித்துள்ளார்.

மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ எம்.பி. அவர்களின் தமிழக மீனவர்கள் பிரச்சினை குறித்த கேள்விக்கு வெளியுறவுத் துறை இணை அமைச்சர் வி.முரளீதரன் அவர்கள் 14.12.2023 அன்று அளித்த பதில் வருமாறு:- சர்வதேச கடல் எல்லைக் கோட்டை தாண்டி இலங்கை கடற்பரப்பில் மீன்பிடித்ததாகக் குற்றச் சாட்டுக் கூறி இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படை அதிகாரிகளால் அவ்வப்போது கைது செய்யப்படுகின்றனர். 

images/content-image/1703259315.jpg

இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவதாகவும் செய்திகள் வருகின்றன. இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவது தொடர்பான செய்திகள் வரும்போதெல்லாம், தூதரகத்தின் மூலம் இலங்கை அரசிடம் இது குறித்து இந்திய அரசு தெரிவித்துள்ளது. இந்திய மீனவர்களின் பாதுகாப்பு மற்றும் நலனுக்கு இந்திய அரசாங்கம் அதிக முன்னுரிமை அளிக்கிறது. 

கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள தூதரகமும் சிறைப்படுத்தப்பட்டுள்ள மீனவர்களுக்கு சட்ட உதவிகளை வழங்கி, அவர்களை முன்கூட்டியே விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. மீனவர்கள் பிரச்னையை அரசு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!