பண்டிகைக் காலத்தில் இருளில் மூழ்குமா இலங்கை?

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
பண்டிகைக் காலத்தில் இருளில் மூழ்குமா இலங்கை?

எதிர்வரும் வார விடுமுறை நாட்களில் மின்வெட்டை தவிர்க்குமாறு சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.  

அவசர பராமரிப்புப் பணிகளுக்காக மின்சாரம் துண்டிக்கப்படுவதைத் தவிர்க்குமாறு இலங்கை மின்சார சபைக்கு அறிவுறுத்தப்பட்டதாக அமைச்சர் குறிப்பிட்டார். 

பராமரிப்பு நோக்கங்களுக்காக மின்சாரம் துண்டிக்கப்படுவது தொடர்பில் சர்வதேச வழிகாட்டுதல்களின்படி செயற்படுவதற்கு  நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

தொடர்ச்சியாக மின்சாரம் துண்டிக்கப்படுவதாக மக்களிடம் இருந்து கிடைத்த முறைப்பாடுகள் தொடர்பில் அவதானம் செலுத்தி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். 

வார இறுதியில் மேற்கொள்ளப்படும் தேவையற்ற பராமரிப்பு பணிகளால் மேலதிக நேர கொடுப்பனவுகளுக்காக பாரிய செலவுகள் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4