நூறாவது நாளை எட்டியது மயிலத்தமடு போராட்டம்!
#SriLanka
#Batticaloa
#Protest
PriyaRam
2 years ago
மட்டக்களப்பு மயிலத்தமடு பண்ணையாளர்களின் தொடர் போராட்டத்தின் நூறாவது நாளான இன்றைய தினம் மட்டக்களப்பில் பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இன்று காலை 9 மணியளவில் சித்தாண்டி முருகன் கோவிலில் ஆரம்பிக்கப்பட்ட அவர்களின் போராட்டம் பிரதான வீதியை அடைந்து அங்கு வரிசையாக நின்று தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,
கஜேந்திரன், சாணக்கியன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் உள்ளிட்ட பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.