தமிழை தொடர்ந்து இந்தியில் கலக்க போகும் “தலைவர் தம்பி தலைமையில்”
#TamilCinema
#release
#Movie
#Hindi
Prasu
1 hour ago
நடிகர் ஜீவா கதையின் நாயகனாக நடித்து ‘தலைவர் தம்பி தலைமையில்’ படம் கடந்த 15ம் திகதி வெளியானது. இந்த படம் 9 நாட்களில் உலகளவில் ரூ.25 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதில் தம்பி ராமையா, இளவரசு, பிராத்தனா நாதன், ஜெய்வந்த், ஜென்சன் திவாகர், மணிமேகலை, சர்ஜின் குமார், ராஜேஷ் பாண்டியன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்த நிலையில், இப்படம் இந்தியில் ரீமேக் ஆகவுள்ளதாகத் தயாரிப்பாளர் கண்ணன் ரவி தெரிவித்துள்ளார்.
பொங்கல் வெளியீடாகத் திரைக்கு வந்து திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் போதே இதன் இந்தி ரீமேக் உரிமம் பெறப்பட்டுள்ளது.
(வீடியோ இங்கே )