வீட்டில் மின் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு சிறுமிகள் உயிரிழப்பு

#India #Death #baby #fire #Tamilnews #Electric
Prasu
1 year ago
வீட்டில் மின் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு சிறுமிகள் உயிரிழப்பு


ஹரியாணா மாநிலத்தில் வீட்டில் மின் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு சிறுமிகள் உயிரிழந்தனர். ஹரியாணா மாநிலம், ஜஜ்ஜார் மாவட்டம், பஹதுர்கர் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட கிராமம் பிஹுனி.

இங்கு வசிக்கும் பிரவீண் என்பரது மகள்கள் தீபன்ஷி (6), மிஸ்டி (6 மாதம்). இக்குழந்தைகள் இருவரையும் நேற்று இரவு வீட்டின் மேல் மாடியில் உள்ள அறையில் தூங்கவைத்துவிட்டு அறையை பூட்டிவிட்டு வந்துள்ளார் பிரவீண். இந்நிலையில் சிறிது நேரத்தில் அந்த அறையில் இருந்த ஸ்விட்ச் பாக்ஸில் மின்கசிவு ஏற்பட்டு தீப்பிடித்துள்ளது. 

இதில் குழந்தைகள் இருவரும் தீயில் கருகி உயிரிழந்தனர்.இச்சம்பவம் குறித்து தகவலறிந்த பஹதுர்கர் பொலிஸார் பிஹுனி கிராமத்துக்குச் சென்று குழந்தைகளின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து கர்முக்தேஷ்வர் துணை காவல் கண்காணிப்பாளர் ஆஷுதேஷ் சிவம் கூறுகையில், “தீ விபத்தால் இரண்டு குழந்தைகள் இறந்துவிட்டதாக தகவல் கிடைத்தது. உடனடியாக பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஆய்வு செய்தனர். 

மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. உயிரிழந்த குழந்தைகளின் பிரேத பரிசோதனைக்குப் பின் உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என்றார்.


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!