தாய்வானுடன் வர்த்தக உடன்படிக்கை கனடா கைச்சாத்திட்டுள்ளது
#Canada
#Lanka4
#லங்கா4
#Agreement
#Canada Tamil News
#Tamil News
Mugunthan Mugunthan
1 year ago

சீனாவை பகைத்துக் கொள்ளும் வகையில் தாய்வானுடன் வர்த்தக உடன்படிக்கையொன்றை கைச்சாத்திட்டுள்ளது. இந்த உடன்படிக்கை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது எனத் தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் தாய்வானை சீனா தனி நாடாக அங்கீகரிக்கவில்லை. இவ்வாறான ஓர் பின்னணியில் தாய்வானுடன் தொடர்புகளை பேணுவது சீனாவுடனான உறவுகளில் விரிசல் நிலை ஏற்படுத்தக் கூடும் என தெரிவிக்கப்படுகின்றது.
வர்த்தக விவகாரங்களை மேம்படுத்தும் நோக்கில் தாய்வானுடன் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. சுயாட்சி நடத்தி வரும் தாய்வானுக்கு கனடா போன்ற மேற்குலக நாடுகள் உதவிகளை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
தாய்வான் மீது சீனா இராணுவ ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் கடுமையான அழுத்தங்களை பிரயோகித்து வரும் பின்னணியில் இவ்வாறு வர்த்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.



