பெருமளவான தங்கத்துடன் இலங்கை வந்த பெண்ணுக்கு 11 கோடி ரூபாய் அபராதம் விதிப்பு!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
பெருமளவான தங்கத்துடன் இலங்கை வந்த பெண்ணுக்கு 11 கோடி ரூபாய் அபராதம் விதிப்பு!

சட்டவிரோதமான முறையில் 12 கோடி ரூபா பெறுமதியான தங்கத்தை இலங்கைக்கு கொண்டு வந்த போது கைது செய்யப்பட்ட இந்திய பெண்ணுக்கு 11 கோடி ரூபாவிற்கும் அதிகமான அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.  

அவர்  5 கிலோ 500 கிராம் தங்கத்துடன் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

12 கோடி ரூபா பெறுமதியான தங்கத்தை பறிமுதல் செய்ய சுங்க திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதுடன், கைது செய்யப்பட்ட பெண்ணுக்கு 11 கோடியே 80 இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர்  சிவலி அருக்கொட தெரிவித்தார்.  

அதே நேரத்தில் அபராதத்தை செலுத்த நடவடிக்கை எடுத்ததாகவும் சுங்கப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4