வட,கிழக்கு பகுதிகளில் மழையுடன் கூடிய வானிலை : வளிமண்டலவியல் திணைக்களம் முன்னறிவிப்பு!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
வட,கிழக்கு பகுதிகளில் மழையுடன் கூடிய வானிலை : வளிமண்டலவியல் திணைக்களம் முன்னறிவிப்பு!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று (24.12) சிறிதளவு மழை பெய்யும் எனவும் வடமத்திய மாகாணத்தில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது. 

திணைக்களத்தின் அறிவிப்பின்படி, சப்ரகமுவ மாகாணம் மற்றும் களுத்துறை மற்றும் காலி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்று பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

மத்திய மலைப்பகுதியின் கிழக்கு சரிவுகளில் அவ்வப்போது பலத்த காற்று வீசக்கூடும் எனவும், காற்றின் வேகமானது மணிக்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வரை பதிவாகும் எனவும் முன்னுரைக்கப்பட்டுள்ளது. 

அதேபோல் சப்ரகமுவ, மத்திய மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை நிலவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இடியுடன் கூடிய மழை,  தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் மக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4