மாத்தறை சிறைக் கைதிகளை பார்வையிடுவதற்கான நேரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
மாத்தறை சிறைக் கைதிகளை பார்வையிடுவதற்கான நேரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது!

மாத்தறை சிறைச்சாலையில் உள்ள கைதிகளை பார்வையிடுவதற்கான நேரம் மட்டுப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இன்றும் (24.12) நாளையும் (25.12) கைதிகளை பார்வையிடுவதற்கான விசேட தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், மேற்படி அறிவிப்பினை  சிறைச்சாலை சுகாதார திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

மாத்தறை சிறைச்சாலையில் 08 கைதிகள் காய்ச்சல் காரணமாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதன்படி, உயிரிழந்த கைதியின் உயிரியல் மாதிரிகள் மேலதிக பரிசோதனைகளுக்காக கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன.

எவ்வாறாயினும், மூளைக் காய்ச்சல் காரணமாக குறித்த கைதி உயிரிழந்துள்ளதாக சுகாதாரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன் காரணமாக இன்றும் நாளையும் கைதிகளை பார்வையிடும் நடவடிக்கைகளை மட்டுப்படுத்த சுகாதார திணைக்களம் தீர்மானித்துள்ளது. 

கிறிஸ்துமஸ் தினத்தன்று கைதிகளை விடுவிக்கும் நடவடிக்கையில் விசேட கவனம் செலுத்த சிறைச்சாலை சுகாதார திணைக்களம் தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

இதேவேளை, மாத்தறை சிறைச்சாலையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பல கைதிகள் தொடர்ந்தும் தங்க வைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. கைதிகளை உடனடியாக வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லவுள்ளதாக சிறைச்சாலை சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4