கடந்த 24 மணித்தியாலங்களில் நீதி நடவடிக்கையின் கீழ் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது!

#SriLanka #Police #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
கடந்த 24 மணித்தியாலங்களில் நீதி நடவடிக்கையின் கீழ் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது!

கடந்த 24 மணித்தியாலங்களில்,  நீதி நடவடிக்கையின் மூலம் 1534 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். 

இவர்களில் 23 பேரின் சொத்துக்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் 99 பேர் மறுவாழ்வுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளனர் என பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.  

இதேவேளை, போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் குற்றக் கும்பலைச் சேர்ந்தவர்களை கைதுசெய்வதற்காக பொலிஸாரால் அமுல்படுத்தப்படும் நீதி நடவடிக்கையை தற்காலிகமாக நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி இன்று முதல் 03 நாட்களுக்கு இந்த நடவடிக்கை அமுல்படுத்தப்பட மாட்டாது என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. 

பண்டிகைக் காலங்களில் விசேட கடமைகளுக்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட வேண்டியிருப்பதால் இந்த நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4