இரு பெரும் கொடையாளிகள்!
இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து சென்று சுவிஸ் நாட்டில் வாழும் தியாகி அறக்கொடை நிறுவனர் வாமதேவா தியாகேந்திரன் மற்றும் சுவிஸ் SKT நாதன் இருவரும் யாழ் மண்ணின் மைந்தர்கள்.
இருவரும் 02 ஆம் திகதி பிறந்தவர்கள். இருவரும் சுவிஸ் நாட்டில் பல மில்லியன் சுவிஸ் பிராங்குகளுக்கு அதிபதிகள். இருவரும் சுவிஸ் நாட்டில் இரவு பகல் உழைத்து, உழைத்து முன்னேறி தமது சொந்தப் பணத்தில் கொடை செய்பவர்கள்.
இருவரும் Lanka4 ஊடகத்திற்கு மிகவும் நெருக்கமானவர்கள். இருவரும் உலகளாவிய ரீதியில் உதவி செய்து கொண்டிருப்பவர்கள்.
இருவரும் பல கோவில்கள் கட்ட உதவியவர்கள். இருவரும் சொந்தமாக ஆலயம் வைத்து வணங்கும் ஆன்மீகவாதிகள். அத்தோடு இவர்களால் பல வயோதிபர் இல்லங்கள் நடத்தப்படுகின்றது.
இவர்கள் பல நூறுபேருக்கு வேலைவாய்ப்பு அளித்துள்ளனர். மற்றும் வைத்தியசாலைகளுக்கு உதவிகள், பாடசாலைகளுக்கு உதவிகள், மயானம் அமைக்க உதவிகள், பலருக்கு வீடமைப்பு, வெள்ள அனர்த்தத்தில், சுனாமிக்கு, புயலுக்கு, போரில் ஏற்பட்ட பாதிப்பில், கல்வி கற்க, ஆசிரியர்களுக்கு, மருத்துவம், மன நோயாளிகளுக்கு என பல்வேறு உதவிகளை செய்தவர்களாவர்.
இவர்களின் சேவைகள் மென்மேலும் தொடரவும், ஆரோக்கியமாக வாழவும் Lanka4 ஊடகம் வாழ்த்தி மகிழ்கின்றது.