நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள்: அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகம்!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள்: அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகம்!

நத்தார் பண்டிகை கொண்டாடப்படும் இன்று (25.12) நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி  நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.  

வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு போதுமானதாக இல்லாவிட்டால் 011 247 27 57 என்ற விசேட இலக்கத்தின் ஊடாக பொலிஸ் தலைமையகத்திற்கு அறிவிக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். 

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திய பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி  நிஹால் தல்துவ இதனைத் தெரிவித்தார்.  

இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மற்றும் அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்களை கைது செய்வதற்கான விசேட நடவடிக்கைகள் இன்று முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

இதேவேளை, சுற்றுலா அல்லது நிகழ்வுகளுக்காக வெளியில் செல்லும் போது வீடுகள் மற்றும் வணிக வளாகங்களின் பாதுகாப்பிற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொலிஸார் பொதுமக்களால் வலியுறுத்தப்பட்டுள்ளனர். 

பண்டிகைக் காலங்களில் கவனக்குறைவாக வாகனம் செலுத்தும் சாரதிகளை இலக்கு வைத்து விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் நாடளாவிய ரீதியில் உள்ள  2,300க்கும் மேற்பட்ட தேவாலயங்களில்  7,500க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4