யாழில் மீட்கப்பட்ட கோடிக்கணக்கான கஞ்சா!
#SriLanka
#Jaffna
PriyaRam
2 years ago
யாழ்ப்பாணம் - வடமராட்சி, வெற்றிலைக்கேணி பகுதியில் சுமார் ஒன்றரை கோடி ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சாவை இலங்கை கடற்படையினர் மீட்டுள்ளனர்.
வெற்றிலைக்கேணி கடற்பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் கரை ஒதுங்கிய மூடையொன்று மீட்கப்பட்டது.
குறித்த மூடையை சோதனை செய்த கடற்படையினர், அதில் 16 பொதிகளில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 35 கிலோ 100 கிராம் கேரள கஞ்சாவை கைப்பற்றியுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா சட்ட நடவடிக்கைக்காக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.