மாத்தறை சிறைச்சாலையில் கைதிகளைப் பார்வையிடத் தடை!

#SriLanka #Prison
PriyaRam
2 years ago
மாத்தறை சிறைச்சாலையில் கைதிகளைப் பார்வையிடத் தடை!

மாத்தறை சிறைச்சாலையில் உள்ள கைதிகளை பார்வையிடுவதற்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஹேமந்த ரணசிங்க தெரிவித்தார்.

மாத்தறை சிறையில் வைக்கப்பட்டிருந்த கைதிகள் மத்தியில் ஒரே மாதிரியான நோய் அறிகுறிகள் தென்பட்ட நிலையில் 16 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த மூன்று கைதிகளில் ஒருவர் கடந்த 22ஆம் திகதி உயிரிழந்தார்.

images/content-image/2023/12/1703501979.jpg

இந்நிலையில் மாத்தறை சிறைச்சாலையில் உள்ள கைதிகளை பார்வையிடுவதற்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

பண்டிகை காலத்தை முன்னிட்டு சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளை பார்வையிடுவதற்கான விசேட தினங்களாக நேற்றும் இன்றும் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இவ்வாறு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

நோய் நிலைமை காரணமாக மாத்தறை வைத்தியசாலையில் உள்ள கைதிகளை பார்வையிடுவதற்கான அனுமதி வழங்கும் நேரத்தை மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இருப்பினும் தற்போது கைதிகளை பார்வையிடுவதற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4