அன்னை வேளாங்கன்னி பேராலயத்தில் கிறிஸ்மஸ் சிறப்பு திருப்பலி நடைபெற்று வருகிறது

#India #worship #Lanka4 #christmas #ஆலயம் #லங்கா4 #Church #news #இந்தியா
Mugunthan Mugunthan
10 months ago
அன்னை வேளாங்கன்னி பேராலயத்தில் கிறிஸ்மஸ் சிறப்பு திருப்பலி நடைபெற்று வருகிறது

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் சிறப்பு திருப்பலி நேற்று நள்ளிரவு முதல் நடந்து வருகிறது. இதில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.

 நாடு முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் நேற்று நள்ளிரவு முதல் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. தமிழகத்தில் உள்ள தேவாலயங்களிலும் நேற்றிரவு முதல் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.

 அதன்படி கீழை நாடுகளின் லூர்து நகர் என்று பெருமையுடன் அழைக்கப்படும் நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் சேவியர் மாநாட்டு பந்தலில் கிறிஸ்துமஸ் பண்டிகை நேற்றிரவு கொண்டாடப்பட்டது. 

images/content-image/1703502171.jpg

கிறிஸ்துமஸ் பண்டிகையை வரவேற்கும் வகையில் பேராலய தியான மண்டபம் செல்லும் வழியில் மின் விளக்குகளால் பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. பேராலயத்தை சுற்றி அலங்கார மின் விளக்குகள் அமைக்கப்பட்டிருந்தது. கிறிஸ்துமஸ் விழாவையொட்டி நேற்றிரவு 11.30 மணிக்கு இயேசு பிறப்பு நிகழ்ச்சி வேளாங்கண்ணி பேராலய அதிபர் இருதயராஜ் தலைமையில் நடந்தது.

 அப்போது தமிழ், தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம், மலையாளம், ஆகிய பல்வேறு மொழிகளில் சிறப்பு திருப்பலி நடந்தது. இதில் வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.

 சிறப்பு திருப்பலிக்கு பின்னர் குழந்தை இயேசுவை பவனியாக எடுத்து வந்து பேராலய அதிபர் இருதயராஜிடம் கொடுக்கப்பட்டது. அப்போது குழந்தை இயேசுவை தூக்கி காண்பித்து இயேசு பிறந்ததாக இரவு 12 மணிக்கு அறிவித்தார்.

 பின்னர் பங்குத்தந்தை அற்புதராஜ், குழந்தை இயேசுவை பெற்று அருகிலுள்ள குடிலில் வைத்தார். இயேசு பிறந்த மகிழ்ச்சியை ஒருவருக்கொருவர் பரிமாறி கொண்டனர். அப்போது வாணவேடிக்கை நிகழ்ச்சியும் நடந்தது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!