தேசிய பாதுகாப்பு தினத்தில் ஆரம்பிக்கப்படவுள்ள புதிய வேலைத்திட்டம்!

#SriLanka #tsunami
PriyaRam
2 years ago
தேசிய பாதுகாப்பு தினத்தில் ஆரம்பிக்கப்படவுள்ள புதிய வேலைத்திட்டம்!

சுனாமி அனர்த்தம் மற்றும் நாட்டில் ஏற்பட்ட பல்வேறு அனர்த்தங்களில் உயிரிழந்த அனைவரையும் நினைவுகூரும் 'தேசிய பாதுகாப்பு தினம்' நாளை அனுஷ்டிக்கப்படுகிறது.

2004 ஆம் ஆண்டி சுனாமியில் 35,000 க்கும் அதிகமானோர் இறந்தனர் மற்றும் 5,000 க்கும் அதிகமானோர் காணாமல் போயினர்.

அதன்படி, 2005 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 26 ஆம் திகதி தேசிய பாதுகாப்பு தினமாக அறிவிக்கப்பட்டு அன்றைய தினம் தேசிய நிகழ்வாக அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.

images/content-image/2023/12/1703503780.jpg

சுனாமி அனர்த்தம் மற்றும் ஏனைய அனர்த்தங்களினால் உயிரிழந்த மக்களை நினைவு கூரும் வகையில் காலை 9.25 முதல் 9.27 வரை இரண்டு நிமிட மௌன அஞ்சலியும் அனுஷ்டிக்கப்படவுள்ளது.

நாளை அனுஷ்டிக்கப்படும் தேசிய பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு, சுனாமி குறித்து முன்கூட்டியே எச்சரிக்கும் புதிய ஒலி எழுப்பும் செயலியும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

மேலும் சுனாமி அபாயம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் புதிய வேலைத்திட்டம் நாளை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!