விடுமுறை தினத்தில் தாமரை கோபுரத்தை பார்வையிட திரண்ட மக்கள்!
#SriLanka
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
தாமரை கோபுரத்தை பார்வையிடுவதற்காக விடுமுறை தினமான நேற்று (24.12) மாத்திரம் 7522 பேர் வருகை தந்ததாக கொழும்பு லோட்டஸ் டவர் மேனேஜ்மென்ட் கம்பனி (பிரைவேட்) லிமிடெட் இன்று (25.12) தெரிவித்துள்ளது.
அதன்படி, 7,285 உள்ளூர் பார்வையாளர்களும், 237 வெளிநாட்டு பார்வையாளர்களும் கோபுரத்தை பார்வையிட்டதாக கூறப்பட்டுள்ளது.
கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15 ஆம் திகதி முதல் மொத்தம் 1,400,444 உள்ளூர் பார்வையாளர்கள் மற்றும் 42,297 வெளிநாட்டினர் தாமரை கோபுரத்தை பார்வையிட வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.