வானில் இருந்து இறங்கிய சாண்டா கிளாஸ்: மகிழ்ச்சியில் சிறுவர்கள்!
#SriLanka
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெளிநாட்டு சுற்றுலாப் பணிகளின் வருகையை கவரும் விதமாகவும், அவர்களை மகிழ்விக்கும் வகையிலும், பெந்தோட்டாவில் உள்ள ஒரு சுற்றுலா விடுதியில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
அதாவது சாண்டா கிளாஸ் வானத்தில் இருந்து வருகை தந்து மக்களுக்கு பரிசு பொருட்களை வழங்கும் வகையில் ஏற்பாடுகள் செய்பட்டிருந்தன. இது தொடர்பான காட்சிகள் ட்ரோன் மூலம் படமாக்கப்பட்டிருந்தன.
குறித்த காட்சிகளில் பாராசூட் மூலம் வானில் இருந்து வந்த சாண்டா கிளாஸ் சிறுவர்களுக்கு பரிசு பொருட்களை வழங்கி மகிழ்வித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.