பிரான்ஸில் நான்கு மாடிக் கட்டிடம் உடைந்து நொருங்கியதில் ஒருவர் கொல்லப்பட்டார்
#France
#Lanka4
#லங்கா4
#Building
#பிரான்ஸ்
#France Tamil News
#Tamil News
#collapse
Mugunthan Mugunthan
1 year ago

நேற்று ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 24) மாலை Marseille (Bouches-du-Rhône) நகரில் இடம்பெற்ற பாரிய வெடிப்பு சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். மார்செய் 6 ஆம் வட்டாரத்தின் rue Bossuet வீதியில் உள்ள நான்கு மாடி கட்டிடம் ஒன்றே திடீரென பாரிய சத்தத்துடன் உடைந்து நொருங்கியது.
கட்டிடத்தின் ஒரு பகுதி திடீரென உடைந்து விழுந்துள்ளது. உடனடியாக தீயணைப்பு படையினர் அழைக்கப்பட்டனர். 20 வரையான தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்து, மீட்பு பணியில் ஈடுபட்டனர். அக்கட்டிடத்தில் ஒன்பது பேர் வசித்த நிலையில், அவர்களில் ஒருவர் கட்டிட இடிபாட்டுக்குள் சிக்கி கொல்லப்பட்டுள்ளார்.
ஏனைய எட்டுப் பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
ஆறாம் வட்டார நகர முதல்வர் சம்பவ இடத்துக்குச் சென்று நிலமைகளை ஆராய்ந்தார். விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.



