இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

#SriLanka #Lanka4 #sri lanka tamil news #lanka4Media #lanka4.com
Thamilini
2 years ago
இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

நாட்டின் வடக்கு, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று (26.12) முதல் மழைவீழ்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

கிழக்கு மாகாணத்தில் அவ்வப்போது மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. 

அதேபோல்  மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில். பிற்பகல் 02 மணிக்கு பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என்றும் முன்னுரைக்கப்பட்டுள்ளதுடன்,  ஊவா மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் காற்றானது மணிக்கு 30-40 கி.மீற்றர் வரை வீசக்கூடும் என எதிர்வுக்கூறப்பட்டுள்ளது. 

இடியுடன் கூடிய மழை தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4