நானாட்டானில் கோர விபத்து - ஸ்தலத்தில் இளைஞன் பலி!

#SriLanka #Mannar #Death #Police #Accident #lanka4Media #lanka4_news #lanka4.com
PriyaRam
2 years ago
நானாட்டானில் கோர விபத்து - ஸ்தலத்தில் இளைஞன் பலி!

மன்னார் நானாட்டான் – முத்தரிப்புத்துறை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன் மற்றும் ஒரு இளைஞர் படுகாயமடைந்த நிலையில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முசலி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள முத்தரிப்புத்துறை கிராமத்தில் இருந்து நானாட்டான் நோக்கி மோட்டார் சைக்கிள் ஒன்றில் இரண்டு இளைஞர்கள் பயணித்துள்ளனர்.

images/content-image/2023/12/1703569356.jpg

இந்நிலையில் குறித்த வீதியில் உள்ள வளைவு ஒன்றில் மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரம் காணப்பட்ட பாலத்தினுள் விழுந்து குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற முத்தரிப்புத்துறை கிராமத்தைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததோடு,மற்றைய இளைஞர் படுகாயமடைந்துள்ளார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முருங்கன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4