பிரான்ஸ் அகதி முகாமிலிருந்து 11 அகதிகள் தப்பி ஓடியுள்ளனர்
#France
#Lanka4
#Refugee
#லங்கா4
#பிரான்ஸ்
#France Tamil News
#Tamil News
#Escape
#Camp
#lanka4Media
#lanka4news
#lanka4.com
Mugunthan Mugunthan
11 months ago
பரிஸ் 12 ஆம் வட்டாரத்தில் உள்ள அகதிகள் தடுப்பு மையத்தில் (Centre de rétention administrative de Vincennes) இருந்து 11 அகதிகள் தப்பி ஓடியுள்ளனர். இன்று திங்கட்கிழமை காலை 7 மணிக்கு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த தடுப்பு மையத்தில் தங்கியிருந்த அகதிகள் ஜன்னல் ஒன்றை உடைத்து அதன்வழியாக தப்பிச் சென்றுள்ளனர். மொத்தமாக 11 அகதிகள் தப்பிச் சென்றதாக காலை 9 மணிக்கு உறுதிப்படுத்தப்பட்டது.
அவர்களில் S கண்காணிப்பு பட்டியலில் உள்ள ஆபத்தான அகதிகள் எவரும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே தடுப்பு முகாமில் கடந்தவாரம் மோதல் ஒன்று இடம்பெற்றதாகவும், அகதிகள் பலர் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.