பிரான்ஸின் கார்பிகுயிட் கிராமத்திற்கு கிறிஸ்மஸ் பரிசாக ஏடிஎம் பண பரிவர்த்தனை இயந்திரம்
பிரான்சில் அண்மைக்காலமாக 'ATM' எனும் பண பரிவர்த்தனை இயந்திரங்களின் பாவனை கணிசமான அளவு பாவனையற்றுப் போவதாகவும், காலப்போக்கில் பொது தொலைபேசி மையங்கள் காணாமல் போன போல் இதுவும் காணாமல் போகும் என தாங்கள் சந்தேகிப்பதாக, பிரான்ஸ் மத்திய வங்கி தெரிவித்துள்ள நிலையில் 'Carpiquet' கிராமத்தில் புதிய 'ATM' பண பரிவர்த்தனை இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த 'Carpiquet' கிராமத்தின் முதல்வர் Pascal SERARD " இது எங்களின் கிராமத்துக்கு கிடைத்த 'cadeau de Noël' கிறிஸ்துமஸ் பரிசு' என தெரிவித்துள்ளார்.
முன்பு பண பரிவர்த்தனை செய்ய குறித்த கிராமத்து மக்கள் பத்து, பதினைந்து நிமிடங்கள் செலவு செய்து அருகில் உள்ள நகரமான Caen நகருக்கு சென்று வந்தனர், இன்று அவர்கள் கிராமத்தில் குறித்த இயந்திரம் இயக்குவது அவர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.
ஒரு கிராம வாசி குறிப்பிடும் போது... "இந்த இயந்திரத்தின் வரவு எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது, ஆனால் அருகிலேயே பண பரிவர்த்தனை இயந்திரம் இருப்பது அதிகமான பணச் செலவையும் ஏற்படுத்தக் கூடியது என தெரிவித்துள்ளார்"